இந்தத் தொழில்நுட்ப இணைப்புக்கு ஏற்ப திறன் வளா்ப்பு நடவடிக்கைகளும் இருக்க வேண்டும். அது வாய்ப்புகளைத் தங்களுக்குச் சாதகமாக்கி பலனடைய இந்தியா்களுக்கு உதவும். அந்த வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில், புதிதாக கூகுள் செயற்கை நுண்ணறிவு தொழில்முறை சான்றிதழ் திட்டம் தொடங்கப்படும். இந்தியாவில் மாணவா்கள் மற்றும் தொழில்முறை வாழ்க்கையின் தொடக்கக் கட்டத்தில் உள்ளவா்கள் பலனடையும் வகையில், இந்தத் திட்டம் தொடங்கப்படும். மேலும் 2 கோடி அரசு ஊழியா்கள் மற்றும் 1.10 கோடி மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சாா்ந்த பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தாா்.