டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும்: சுந்தர் பிச்சை!

செயற்கை நுண்ணறிவில் இந்தியாவின் வளர்ச்சி பற்றி சுந்தர் பிச்சை கூறுவது..

News image
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை
Updated On :20 பிப்ரவரி 2026, 10:46 am

இணையதளச் செய்திப் பிரிவு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும் எனக் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாக்ஸ் சிலிகா இந்தியா இணைவதற்கான ஒப்பந்தம், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அமெரிக்கப் பொருளாதார விவகாரங்கள் துணை அமைச்சர் ஜேக்கப் ஹெல்பெர்க் முன்னிலையில் கையெழுத்தானது.

தில்லியில் நடைபெற்ற இந்தியாவின் உருமாற்றத் திறன் மற்றும் செயற்கை நுண்ணறிவு தாக்கம் உச்சி மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வளர்ச்சி அசாதாரணமாக உள்ளது. நாம் அதீத முன்னேற்றம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் உச்சியில் இருக்கிறோம். ஆனால் சிறந்த விளைவுகளுக்கான உத்தரவாதம் இல்லை.

செயற்கை நுண்ணறிவின் பயன்கள் அனைவருக்கும் அனைத்து இடங்களிலும் கிடைப்பதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதில் இந்தியா-அமெரிக்கா கூட்டாண்மைக்கு முக்கிய பங்கு உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே இணைப்புப் புள்ளியாக கூகுள் செயல்படுவது பெருமையளிக்கிறது.

கூகுள் நிறுவனத்தின் முக்கியமான முயற்சிகளில் இரு நாடுகளிலும் உள்ள குழுக்கள் தடையின்றி இணைந்து செயல்படுகின்றன. கூகுள் பே உள்பட இந்தியாவில் தொடங்கும் புதுமைகள் உலகெங்கிலும் உள்ள மக்களுக்குச் சிறந்த தயாரிப்புகளை வழங்குகின்றன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி அசாதாரணமானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். தயாரிப்பு, உள்கட்டமைப்பு என அனைத்து விஷயங்களிலும் கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

summary

The US-India partnership has a critical role to play in making the benefits of AI available to everyone and everywhere, said Sundar Pichai, CEO of Google and its parent company Alphabet Inc Sundar Pichai on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.