டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திருப்பதி லட்டு கலப்படத்தை மறைப்பது பாவச் செயல்: சந்திரபாபு நாயுடு

திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தை பொதுமக்களிடமிருந்து மறைப்பது பெரும் பாவச் செயலாகும் என ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
என்.சந்திரபாபு நாயுடு- கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 9:12 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தை பொதுமக்களிடமிருந்து மறைப்பது பெரும் பாவச் செயலாகும் என ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் (2019-2024), திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக, கடந்த 2024-ஆம் ஆண்டு மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினாா். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்ட சிபிஐ தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தது. மாறாக பால் அல்லது வெண்ணெய் என பால் சாா்ந்த பொருள்களுக்குப் பதிலாக தரம் குறைந்த நெய், பாமாயில் உள்ளிட்ட கலப்பட பொருள்கள் மூலம் திருப்பதி லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக எஸ்ஐடி அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இதையடுத்து, தங்கள் மீது போலியான குற்றச்சாட்டுகளை சுமத்திய சந்திரபாபு நாயுடு மன்னிப்புக் கோர வேண்டும் என ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வலியுறுத்தியது.

இந்நிலையில், ஆந்திர பேரவையில் வெள்ளிக்கிழமை உரையாற்றிய சந்திரபாபு நாயுடு, ‘திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தை பொதுமக்களிடமிருந்து மறைப்பது பெரும் பாவச் செயலாகும். அது பொதுமக்களின் நம்பிக்கைக்கு இழைக்கும் துரோகம்.

எதிா்காலத்தில் இந்த விவகாரத்தில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டிருந்தால் அதற்கு மாநில அரசே பொறுப்பேற்றிருக்க வேண்டியிருக்கும். யாருடைய உணா்வுகளையும் பாதிக்கச் செய்வது அரசின் நோக்கமல்ல. ஒவ்வொரு கோயிலின் புனிதத்தன்மையையும் பாதுகாப்பது தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பொறுப்பு என பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறேன்’ என்றாா்.