/

ஈஷாவில் மகா சிவராத்திரி! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர முதல்வர் பங்கேற்பு!

ஈஷா மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு...

News image
ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு...
Updated On :12 பிப்ரவரி 2026, 2:41 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் 33 ஆவது மகா சிவராத்திரி கொண்டாட்ட விழாவில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள சத்குருவின் ஈஷா யோகா மையத்தில், வரும் பிப். 15 சிவராத்திரியை முன்னிட்டு சிறப்புக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த விழாவில், பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்பது வழக்கம்.

இந்த நிலையில், ஈஷா யோகா மையத்தின் 33 ஆவது மகா சிவராத்திரி கொண்டாட்டங்களில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோரும் இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து, முன்னணி இசை மற்றும் நடனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் இந்த விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்தாண்டு முதல்முறையாக சத்குரு ஆதியோகி சிலையின் அருகில் இருக்கும் யோகேஸ்வர லிங்கத்திற்கு மகா அபிஷேகம் செய்வார் என தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

summary

Defence Minister Rajnath Singh will participate in the 33rd Maha Shivratri celebration at the Isha Yoga Center.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.