நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸில் பிழைகள் இருப்பதாக மக்களவை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், நோட்டீஸை நிராகரிக்க வேண்டாம் என்றும், பிழைகளை சரிசெய்து திரும்பப் பெற்று நடவடிக்கைகளை விதிகளின்படி தொடருமாறும் ஓம் பிர்லா மக்களவை செயலகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன. 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்தில், சீன விவகாரம் குறித்து பேசுவதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஓம் பிர்லா அனுமதி மறுத்தார்.
இதனிடையே, பிப். 4 ஆம் தேதி அன்று இந்த தீர்மானத்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உரையாற்றுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடி அன்று அவைக்கு வரவில்லை.
'பிரதமர் மோடியை நான்தான் வர வேண்டாம் என்று கூறினேன், அவருக்கு எதிராக எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் சதி செய்யத் திட்டமிட்டிருந்தனர்' என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார். பெண் எம்.பி.க்கள் குறித்து கருத்து தெரிவித்ததால் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சி தரப்பில் கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை காங்கிரஸ் கட்சியினர் மக்களவை செயலகத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கினர்.
இந்த நோட்டீஸில் பிப்ரவரி 2026 என்பதற்கு பதிலாக நான்கு இடங்களில் பிப்ரவரி 2025 என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், விதிகளின்படி, இந்த நோட்டீஸை மக்களவை செயலகம் நிராகரிக்கக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகின.
இருப்பினும், நோட்டீஸை நிராகரிக்க வேண்டாம் என்றும், பிழையைத் திருத்தம் செய்து வாங்கி விதிகளின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கையைத் தொடருமாறும் மக்களவை செயலகத்துக்கு ஓம் பிர்லா அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தற்போதைய முதல்கட்ட அமர்வில் விவாதத்துக்கு வர வாய்ப்பில்லை எனத் தெரிகின்றது.
மார்ச் மாதம் தொடங்கவுள்ள பட்ஜெட் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வில்தான் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
summary
Errors in the no-confidence motion! Om Birla's advice to correct them!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மக்களவை நடவடிக்கைகளில் ஓம் பிர்லா பங்கேற்க மாட்டார்?

ராகுல் கையெழுத்திடவில்லை! ஓம் பிர்லா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறுமா?

ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கியது காங்கிரஸ்!

மக்களவை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


