டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மக்களவை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பது பற்றி...

News image
மக்களவை தலைவர் ஓம் பிர்லா- ANI
Updated On :9 பிப்ரவரி 2026, 6:21 am

இணையதளச் செய்திப் பிரிவு

மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த வாரம் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது உரையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா - சீனா மோதல் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி எம்எம் நரவணே எழுதிய நூலில் குறிப்பிடப்பட்டிருந்ததை மேற்கோள் காட்ட முயன்றார்.

இதற்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவிக்க, ராகுல் காந்தி பேசுவதற்கு ஓம் பிர்லா அனுமதி மறுத்தார்.

இதனை கண்டித்து மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு புதன்கிழமை மாலை பிரதமர் அளிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், உரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்த ஓம் பிர்லா அவையை ஒத்திவைத்தார்.

மக்களவையில் பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததால், அவைக்கு வரவேண்டாம் என்று பிரதமரை தான் அறிவுறுத்தியதாக ஓம் பிர்லா விளக்கம் அளித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.