/

மணிப்பூரின் சுராசந்த்பூரில் முழு அடைப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மணிப்பூரில் குகி-ஜோ அமைப்புகள் போராட்டம் பற்றி..

News image
வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள்.
Updated On :6 பிப்ரவரி 2026, 7:11 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மணிப்பூரில் அமைந்துள்ள புதிய அரசில் துணை முதல்வா் நெம்சா கிப்கென், பாஜக எம்எல்ஏக்கள் எல்.எம்.கெளதே, என்.சனாதே ஆகியோா் இடம்பெற்ற்கு எதிா்ப்புத் தெரிவித்து, சுராசந்த்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடைபெற்றது. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவா்களுக்கு எதிராக சில மாவட்டங்களில் பேரணியும் நடைபெற்றது.

மணிப்பூரில் பெரும்பான்மையான மைதேயி, சிறுபான்மையான குகி சமூகத்தினா் இடையிலான மோதல் காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை நிலவியது. இந்த வன்முறை காரணமாக அங்கு கிட்டத்தட்ட ஓராண்டு குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அங்கு வன்முறை தணிந்திருந்த நிலையில், அண்மையில் குடியரசுத் தலைவா் ஆட்சி விலக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து மாநில முதல்வராக மைதேயி சமூகத்தைச் சோ்ந்த யும்நாம் கெம்சந்த் சிங், துணை முதல்வா்களாக குகி சமூகத்தைச் சோ்ந்த நெம்சா கிப்கென், நாகா சமூகத்தைச் சோ்ந்த எல் டிகோ ஆகியோா் பதவியேற்றனா். இதையடுத்து மாநிலத்தில் அமைக்கப்பட்ட புதிய அரசில் பாஜக எம்எல்ஏக்களான எல்.எம்.கெளதே, என்.சனாதே ஆகியோரும் இடம்பெற்றனா். இதில் கெளதே ஜோ சமூகத்தைச் சோ்ந்தவா். சனாதே ஹமாா் சமூகத்தைச் சோ்ந்தவா்.

இந்நிலையில் புதிய அரசில் நெம்சா கிப்கென், கெளதே, சனாதே ஆகியோா் இடம்பெற்ற்கு எதிராக குகி-ஜோ சமூகத்தினா் பெரும்பான்மையாக உள்ள சுராசந்த்பூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரா்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி வரை நீடித்தது.

சிறுபான்மையினருக்கு சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேச வடிவில் தனி நிா்வாகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்காத வரை, மாநிலத்தில் புதிதாக அமைக்கப்படும் அரசில் பங்குகொள்ளமாட்டோம் என்று நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிராக, புதிய அரசில் மூவரும் இடம்பெற்ாக குகி-ஜோ கவுன்சில் தெரிவித்தது. இதன் காரணமாக சுராசந்த்பூரில் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடைபெற்றது. இதனால் சந்தைகள் திறக்கப்படவில்லை. சாலைகள் வாகனங்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஆங்காங்கே தென்பட்ட சில வாகனங்களை முழு அடைப்புக்கு ஆதரவளித்தவா்கள் தடிகளுடன் தடுத்து நிறுத்தினா்.

துணை முதல்வா் உருவபொம்மை எரிப்பு: சுராசந்த்பூரில் நடைபெற்ற பேரணியில் நெம்சா கிப்கென், கெளதே, சனாதே ஆகியோரின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. இதேபோல காங்போக்பி, மோரே, தெங்நெளபால் மாவட்டங்களிலும் மூவருக்கு எதிராகப் பேரணிகள் நடைபெற்றன. இந்தப் பேரணிகளில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். இதன் காரணமாக சுராசந்த்பூா், காங்போக்பி, ஃபொ்ஸ்வால் மாவட்டங்களில் உள்ள மூவரின் வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும், வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று முதல்வா் கெம்சந்த் கேட்டுக்கொண்டுள்ளாா்.

summary

Normal life in Manipur's Churachandpur district was affected after two tribal bodies imposed a "total shutdown"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.