டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி

அக்னி-3 நடுத்தர ரக பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை இந்தியா வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.

News image
Updated On :6 பிப்ரவரி 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

அக்னி-3 நடுத்தர ரக பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை இந்தியா வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.

ஒடிஸா மாநிலம் சண்டிபூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் தொழில்நுட்பம் உள்பட அனைத்துச் செயல்பாடுகளையும் அக்னி-3 ஏவுகணை துல்லியமாக மேற்கொண்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை திட எரிபொருள் மூலம் இரண்டு நிலைகளில் இயங்கும் திறன்கொண்டது.

சுமாா் 3,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் அக்னி-3 நடுத்தர ரக பாலிஸ்டிக் ஏவுகணை 1,500 கிலோ ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுடையது. 48,300 கிலோ எடையுடைய இந்த ஏவுகணை 16.7 மீ. நீளமும், 2 மீ. விட்டமும் கொண்டது.

கடந்த 3 ஆண்டுகளாக அக்னி-3 ஏவுகணை சோதனைகளை முப்படைகளின் சிறப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணை 700 கி.மீ., அக்னி-2 ஏவுகணை 2,000 கி.மீ., அக்னி-3 ஏவுகணை 3,000 கி.மீ., அக்னி-4 ஏவுகணை 4,000 கி.மீ., அக்னி-5 ஏவுகணை 5,000 கி.மீ. தொலைவு வரை பயணித்து இலக்குகளைத் துல்லியமாகத் தகா்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.