டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மலையாள நடிகர் கார் மீது மோதிய இருசக்கர வாகனம்! இருவர் படுகாயம்!

மலையாள நடிகர் கார் மீது இருசக்கர வாகனம் மோதியது பற்றி...

News image
Updated On :6 பிப்ரவரி 2026, 6:41 am

இணையதளச் செய்திப் பிரிவு

பிரபல மலையாள நடிகர் மணியன்பிள்ளை ராஜூவின் கார் மீது வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

கடந்த 50 ஆண்டுகளாக மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் மணியன்பிள்ளை ராஜூ. சுமார் 400 படங்களில் நடித்துள்ள இவர், தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள வழுதக்காடு கிளப் அருகே வியாழக்கிழமை 9.30 மணியளவில் மணியன்பிள்ளை ராஜூ பயணித்த கார் பிரதான சாலையைக் கடக்க முயன்றது.

அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞர்கள் காரின் முன்புறம் மோதி கீழே விழுந்தனர். இதில், சூரஜ் மற்றும் நிதேவ் ஆகிய இரு இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.

இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து கேரள காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியில் கார் மெதுவாக சாலையை கடக்க முயற்சிப்பதும், இரு சக்கர வாகனம் அதிவேகமாக வந்து மோதுவதும் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.