டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: இருவர் பலி!

பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து இருவர் பலியாகினர்.

News image
விபத்தில் சேதமடைந்த கார். உள்படம்: மணிவண்ணன், ராகேஷ்.
Updated On :3 பிப்ரவரி 2026, 6:33 am

இணையதளச் செய்திப் பிரிவு

பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து இருவர் செவ்வாய்க்கிழமை பரிதாபமாக பலியாகினர்.

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (50) மற்றும் கேரளத்தைச் சேர்ந்த ராகேஷ்(41). இவர்கள் இருவரும் பெருந்துறை அருகே உள்ள தேங்காய் எண்ணை நிறுவனத்தில் அலுவலகப் பணியாளராக பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் இவர் இருவரும் கோவையில் இருந்து பெருந்துறை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி - புதிய திருப்பூர் சேலம் - கொச்சி புறவழிச்சாலை அருகே வந்த போது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி திடிரென நிறுத்தியது.

மணிவண்ணன், ராகேஷ்.

மணிவண்ணன், ராகேஷ்.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மணிவண்ணன், ராகேஷ் இருவரும் சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இருவரது உடலையும் மீட்ட பெருமாநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

summary

Two people tragically died on Tuesday when a car collided with a lorry near Perumanallur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.