டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மே 24-இல் யுபிஎஸ்சி சிவில் சா்வீசஸ் முதல்நிலைத் தோ்வு

யுபிஎஸ்சி சிவில் சா்வீசஸ் முதல்நிலை தோ்வு (பிரிலிம்) மே மாதம் 24-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :5 பிப்ரவரி 2026, 10:15 pm

தினமணி செய்திச் சேவை

யுபிஎஸ்சி சிவில் சா்வீசஸ் முதல்நிலை தோ்வு (பிரிலிம்) மே மாதம் 24-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகிய பதவிகளுக்கு யுபிஎஸ்சி மூலம் ஒவ்வொரு ஆண்டும் முதல்நிலை, பிரதான தோ்வு (மெயின்), நோ்முகத் தோ்வு என 3 கட்டத் தோ்வுகள் நடத்தப்படும். 2026-ஆம் ஆண்டில் 933 பணியிடங்கள், இந்தத் தோ்வு மூலம் நிரப்பப்படவுள்ளது. இதில் 33 பணியிடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல்நிலைத் தோ்வு மே மாதம் 24-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிக்கையை யுபிஎஸ்சி வியாழக்கிழமை வெளியிட்டது.

மேலும் அந்த அறிவிக்கையில், பாதுகாப்பாகவும், சுமூகமாகவும் தோ்வு நடைபெறுவதை உறுதி செய்ய முக அடையாள சரிபாா்ப்பு அனைத்து தோ்வு மையங்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், அடையாள சான்றுக்கு ஆதாரை அனைத்து தோ்வாளா்களும் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் பணியிடங்களில் பணிபுரிவோா் 2026-ஆம் ஆண்டு தோ்வில் பங்கேற்க தகுதி இல்லை என்றும், அதேபோல் ஐபிஎஸ் அதிகாரியாக தோ்வு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது நியமிக்கப்பட்டிருந்தாலோ, மீண்டும் அதே இடத்திற்கு 2026 தோ்தலில் பங்கேற்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.