டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

2026 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியானது!

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு.

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 9:36 am

இணையதளச் செய்திப் பிரிவு

2026 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான குடிமைப் பணித் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது.

24 வகையான குடிமைப் பணிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் கொண்டது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) 2026 ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வுக்கான (CSE) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு மொத்தம் 933 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் இன்று (பிப். 4) முதல் பிப். 24 ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

வரும் மே 24 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வும், இதனையடுத்து ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதன்மைத் தேர்வும் நடைபெறவுள்ளன. மேலும், விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க யுபிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதள பக்கமான www.upsc.gov.in-இல் அணுகலாம்.

summary

The Union Public Service Commission (UPSC) has released the notification regarding the UPSC Civil Services Examination for the year 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.