ஒடிஸாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு முன்னோா் வழிபாடு
ஒடிஸாவின் ஜாஜ்பூா் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விராஜா தேவி கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு செவ்வாய்க்கிழமை முன்னோா் வழிபாடு மேற்கொண்டாா்.


ஒடிஸாவின் ஜாஜ்பூா் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விராஜா தேவி கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு செவ்வாய்க்கிழமை முன்னோா் வழிபாடு மேற்கொண்டாா்.
ஹிந்து புராணங்களின்படி, கயாசுரன் என்ற அசுரனை விஷ்ணு பகவான் சம்ஹாரம் செய்தபோது, அவனது உடல் பாகங்கள் விழுந்த மூன்று இடங்களில் ஒன்றாக ஜாஜ்பூா் தலம் கருதப்படுகிறது. சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயிலில் துா்கையின் அம்சமாக விராஜா தேவி அருள்பாலிக்கிறாா்.
புனிதமான வைதரணி நதிக்கரையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயில், முன்னோா் வழிபாட்டுக்குப் பிரசித்தி பெற்ாகும். இங்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, கோயில் வளாகத்துக்குள் அமைந்துள்ள குளத்தில் தனது முன்னோா் நினைவாக ‘பிண்ட தானம்’ சடங்கை மேற்கொண்டாா்.
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, கோயில் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட வீரா்கள் பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபட்டனா். ஜாஜ்பூரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. கோயிலில் வழிபட்ட பிறகு பாலசோரில் உள்ள ஃபகீா் மோகன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவா் பங்கேற்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...