/

தொலைநோக்கு பார்வையில்லாத, மக்கள் விரோத பட்ஜெட்: மமதா பானர்ஜி

2026- 27 மத்திய பட்ஜெட் குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து...

News image
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி- (கோப்புப் படம்)
Updated On :1 பிப்ரவரி 2026, 9:21 am

இணையதளச் செய்திப் பிரிவு

2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களுக்கு விரோதமான பட்ஜெட் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.

பட்ஜெட் குறித்து தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"2026 பட்ஜெட் திசையற்றது, தொலைநோக்குப் பார்வையற்றது, மக்களுக்கு விரோதமானது. பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கு எதுவும் இல்லை, குறிப்பாக மேற்குவங்க மாநிலத்திற்கு எந்த அறிவிப்பும் இல்லை.

பெண்கள், விவசாயிகள், கல்விக்கு எதிரானது. பட்டியல் சாதியினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பட்ஜெட்டில் எதுவும் இல்லை" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.