/

மத்திய பட்ஜெட் வளர்ச்சிக்கானது: பிரதமர் மோடி

தொலைநோக்குடன், நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

News image
பிரதமர் மோடி
Updated On :1 பிப்ரவரி 2026, 9:24 am

தினமணி செய்திச் சேவை

தொலைநோக்குடன், நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் 2026 குறித்து பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாவது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கானது. 2047இல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. பட்ஜெட்டில் மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும். நாட்டு மக்களின் தொழில திறனை வளர்ப்பதற்கு நிர்மலா சீதாராமன் முக்கியத்துவம் அளித்துள்ளார். உலகத்தின் டேட்டா சென்டர் மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். பல முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

இந்த பட்ஜெட் இந்தியாவின் உலகளாவிய பங்கை மேலும் வலுப்படுத்துகிறது. இந்தியாவின் 140 கோடி குடிமக்கள் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதில் திருப்தி அடைவது மட்டுமல்லாமல், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக விரைவில் மாறவும் விரும்புகிறோம்.

இது நாட்டின் கோடிக்கணக்கான குடிமக்களின் உறுதிப்பாடாகும். நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதிலும், பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதிலும் கவனம் செலுத்தும் தனித்துவமான பட்ஜெட் இது. மேலும், அதிக மூலதனம் மற்றும் அதிக வளர்ச்சியின் கலவையையும் பட்ஜெட் கொண்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டார்.

summary

PM Modi hailed Union Budget 2026 as a historic and future-oriented plan that empowers women and accelerates India's journey to become the world's third-largest economy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.