/

வருமான வரிக் கணக்கு! மத்திய பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!

சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வெளிநாட்டினருக்கு அரிய வாய்ப்பு வழங்கப்படும்.

News image
- ANI
Updated On :1 பிப்ரவரி 2026, 7:53 am

இணையதளச் செய்திப் பிரிவு

16வது நிதிக் குழு பரிந்துரை ஏற்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அவர் வருமான வரிக் கணக்கு மற்றும் வரிச் சட்டம், வரி விலக்குகள் குறித்த அறிவிப்பில்,

வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிசட்டம் நடைமுறைக்கு வரும்.

வெளிநாட்டு சுற்றுலாவுக்கன வரி பிடித்தம் 2 சதவீதமாகக் குறைக்கப்படும்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும்.

வருமான வரிக் கணக்கு தாக்கல் எளிமையாகிறது.

வாகன விபத்துக்கான இழப்பீட்டுத் தொகைக்கு வரிச் சலுகை அறிவிக்கப்படும்

வருமான வரி பிடித்தம் தொடர்பான விதிகளில் தளர்வு அறிவிக்கப்படும்.

மருத்துவக் கல்விக் கடனுக்கான வரி 5 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தரவு மையங்களை அமைக்க ஊக்குவிக்கப்படும்.

இந்தியாவில் தரவு மையங்களுக்கு வரும் 2047ஆம் ஆண்டு வரை முழு வரி விலக்கு அளிக்கப்படும்

வரிச் சார்ந்த குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனை 2 ஆண்டுகளாகக் குறைப்பு

வருமான வரித் தாக்கல் தொடர்பான சிறு குற்றங்களுக்கு குற்றவியல் நடவடிக்கை இல்லை.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் சொத்துக் கணக்கை காட்ட வாயப்பு அளித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

6 மாதங்களுக்குள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்வதற்கான புதிய திட்டத்தை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்.

சாதாரண குடிமக்கள் தாக்கல் செய்யும் வகையில் எளிய முறையில் வருமான வரிக் கணக்கு தாக்கல் முறை அமையும்.

தனிநபர்கள் வழக்கம் போல ஜூலை 31ஆம் தேதி வரை வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.