மத்திய பட்ஜெட்டில் ஏழைகளுக்கென்று எந்த திட்டங்களும் இல்லை என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார். சுமார் 1.23 மணி நேரம் பட்ஜெட் உரை நிகழ்த்திய அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டை காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளத்தில், மோடி அரசிடம் புதிய யோசனைகள் தீர்ந்துவிட்டன.
பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்கள் குறித்து பதில்களைவிட அதிக கேள்விகளையே பட்ஜெட் எழுப்புகிறது. ஏழை மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. இளைஞர்களிடையே நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எந்தத் தீர்வும் கூறவில்லை.
மேலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எந்த உறுதியான நடவடிக்கைகளையும் முன்வைக்கவில்லை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
summary
Congress President and Leader of Opposition in the Rajya Sabha Mallikarjun Kharge on Sunday criticised the proposals, alleging that they fail to address key economic challenges facing the country, offer no relief to vulnerable sections of society, and no solution to unemployment among the youth.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பட்ஜெட்டில் கேரளம் புறக்கணிப்பு: எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

குறு-சிறு-நடுத்தர (எம்எஸ்எம்இ) நிறுவனங்கள் துறைக்கு ரூ. 10,000 கோடி வளா்ச்சி நிதி!

பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.84 லட்சம் கோடி! நிகழாண்டு 15.19 சதவீதம் அதிகம்!

தமிழகத்துக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி துரோகம்: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


