
60 ஆண்டுகளுக்குப் பின் பட்டம் பெற்ற மிசோரமின் முன்னாள் முதல்வர்!
மிசோரம் முன்னாள் முதல்வர் சோரம்தங்கா 60 ஆண்டுகளுக்குப் பிறகு இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்...
60 ஆண்டுகளுக்குப் பிறகு தனது இளங்கலைப் படிப்பிற்கான பட்டம் பெற்றார் மிசோரமின் முன்னாள் முதல்வர் சோரம்தங்கா... - எக்ஸ்/ கௌகாத்தி பல்கலை.
மிசோரமின் முன்னாள் முதல்வர் சோரம்தங்கா 60 ஆண்டுகளுக்குப் பிறகு தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமின் முன்னாள் முதல்வரும், மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவருமான சோரம்தங்கா கடந்த 1966 ஆம் ஆண்டு மணிப்பூரில் உள்ள தனமஞ்சூரி கல்லூரியில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார்.
கடந்த 1965 ஆம் ஆண்டு கல்லூரி காலங்களிலேயே மிசோ தேசிய முன்னணியில் இணைந்த சோரம்தங்கா, இறுதித்தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றும் தனது படிப்பிற்கான பட்டத்தைப் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
1966 ஆம் ஆண்டு தேர்வுகளை முடித்த உடனே, அவர் தலைமறைவாகி மிசோ தேசிய முன்னணியின் ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்க வங்கதேசத்தில் (அப்போதைய கிழக்கு பாகிஸ்தான்) முகாமிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், 82 வயதான முன்னாள் முதல்வர் சோரம்தங்காவுக்காக கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் இன்று (ஆக. 20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டப்படிப்பிற்கான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1986 ஆம் ஆண்டு மத்திய அரசுடன் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் மூலம் மிசோரம் தேசிய முன்னணியின் ஆயுதப் போராட்டங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. இதையடுத்து, அரசியலில் களமிறங்கிய சோரம்தங்கா 1998 முதல் 2008 வரையிலும், 2018 முதல் 2023 வரையிலும் மூன்று முறை மிசோரமின் முதல்வராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
former Mizoram Chief Minister Zoramthanga received his bachelor's degree after 60 years.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







