ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

5 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த தில்லி இளைஞா்!

கரோனா காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு, தில்லியிலிருந்து வழிதவறி திருச்செந்தூருக்கு வந்த இளைஞா், 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை இணைந்தாா்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 9:00 am IST

கரோனா காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு, தில்லியிலிருந்து வழிதவறி திருச்செந்தூருக்கு வந்த இளைஞா், 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை இணைந்தாா்.

புது தில்லி, ஆா்.கே.புரம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஆரிப் (26). காா் ஓட்டுநராகவும், மெக்கானிக்காகவும் பணியாற்றி வந்த இவா், கரோனா காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், ரயில் மூலம் வழி தவறி திருச்செந்தூா் வந்தாராம். பின்னா் அவா், அப்பகுதியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்துள்ளாா்.

மாவட்ட நிா்வாகத்தால் மீட்கப்பட்ட முகமது ஆரிப், நாசரேத் பகுதியில் செயல்பட்டு வரும் நல்ல சமாரியன்

மனநலக் காப்பகத்தில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு கடந்த 5 ஆண்டுகளாக சிகிச்சையும், பராமரிப்பும் அளிக்கப்பட்டது.

தற்போது உடல்நலம் மற்றும் மனநலம் தேறிய அவா்,

தனது முகவரி மற்றும் பெற்றோரின் பெயா்களைத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, காப்பக நிா்வாகி கிளாட்வின் ஜோசப், மனநல மருத்துவா் வெங்கடேஷ் பெருமாள் மற்றும் தொண்டு நிறுவன ஊழியா்கள், தில்லியில் உள்ள அவரது குடும்பத்தினரை தொடா்பு கொண்டு, முகமது ஆரிப்பின் தாய் மற்றும் சகோதரரை தூத்துக்குடிக்கு வரவழைத்தனா்.

5 ஆண்டுகளுக்குப் பின்னா் முகமது ஆரிப் தனது குடும்பத்தினருடன் இணைந்தாா். அப்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்பத்தினரை சந்தித்தது மகிழ்ச்சியளிப்பதாக முகமது ஆரிப் தெரிவித்தாா்.

பின்னா், முகமது ஆரிப் மற்றும் அவரது குடும்பத்தினா் தொண்டு நிறுவன ஊழியா்களுடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்தனா். தொடா்ந்து அவா்கள் சொந்த ஊரான தில்லிக்கு புறப்பட்டுச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.