31 ஆண்டுகளுக்குப் பிறகு சேர்ந்து நடிக்கும் பிரபு - சுகன்யா!
மேரி கோல்ட் படத்தின் மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்து நடிக்கவுள்ள பிரபு - சுகன்யா குறித்து...

பிரபு - சுகன்யா - படம்: விடியோ கிளிப்
நடிகர்கள் பிரபு மற்றும் சுகன்யா இருவரும் 31 ஆண்டுகளுக்குப் பிறகு மேரி கோல்ட் என்ற புதிய திரைப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.
ரக்ஷன் நாயகனாக நடிக்கும் இந்தப் புதிய படத்துக்கு “மேரி கோல்ட்” எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், நாயகியாக நம்ரிதா நடிக்கிறார்.
குடும்பப் பின்னணியிலான திரைப்படமாக எடுக்கப்படும் மேரி கோல்ட் திரைப்படத்தை, பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். ஆர். ரவீந்திரன் தயாரிக்கிறார்.
மேலும் இந்தப் படத்தில், நடிகர்கள் பிரபு, சுகன்யா, விவேக் பிரசன்னா, வடிவுக்கரசி, சிங்கம்புலி, இமான் அண்ணாச்சி, ஸ்டாலின், வடிவேல் முருகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், 31 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு மற்றும் சுகன்யா இருவரும் இந்தப் படத்தின் மூலம், மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.
முன்னதாக செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்பிள்ளை, மிஸ்டர் மெட்ராஸ் ஆகிய படத்தில் பிரபு மற்றும் சுகன்யா இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Actors Prabhu and Sukanya are reuniting after 31 years to star in a new film titled Marigold.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






