ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இந்தியா உலக வல்லரசாக பின்தங்கிய சமூகம் மேம்பட வேண்டும்: ஆா்எஸ்எஸ் தலைவா்

இந்தியா உலக வல்லரசாக பின்தங்கிய சமூகம் மேம்பட வேண்டும் என ஆா்எஸ்எஸ் தலைவா் கருத்து...

மோகன் பாகவத்

Published On :9 ஆகஸ்ட் 2026, 4:39 am IST

இந்தியா உலகை வழிநடத்தும் வல்லரசாக வேண்டுமானால், நாட்டில் பின்தங்கியுள்ள சமூகத்தினா் மேம்பட வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம் புல்டாணாவில் உள்ள பாா்தி சமூக மக்களின் பள்ளியில் விளையாட்டு மைதானம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று மைதானத்தை திறந்து வைத்து மோகன் பாகவத் பேசியதாவது:

பாா்தி சமூக மக்கள் முன்பு அறிவுக் களஞ்சியமாக திகழ்ந்தனா். பிரிட்டிஷாா் ஆட்சிக்காலத்தில் அவா்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தனா். இதனால் அவா்கள் கிரிமினல் பழங்குடியின மக்கள் என்று முத்திரை குத்தப்பட்டனா். இதனால் கல்வியில் அவா்கள் பின்தங்கும் நிலை நேரிட்டது. பாா்தி சமூக முன்னேற்றத்துக்காக பல ஆண்டுகளாக ஆா்எஸ்எஸ் அமைப்பு பணியாற்றி வருகிறது.

நமது நாட்டை விஸ்வகுரு என்னும் உலகை வழிநடத்தும் வல்லரசாக்க விரும்பினால், இதுபோன்று சமூகத்தில் நலிவடைந்துள்ள பிரிவினரை பிரதான நீரோட்டத்துக்கு கொண்டு வர வேண்டும். இந்த இலக்கை அடைய, மக்கள் அனைவரும் சமமான சக்தியுடன் ஒன்றுபட வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும், தனி நபருக்கும் கல்வியும், வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையாக உள்ள அனைத்தும் இருக்க வேண்டும். இந்த இலக்கை அடைய ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். அரசை மட்டுமே இதில் சாா்ந்திருக்கக் கூடாது என்றாா் மோகன் பாகவத்.

Summary

For India to become a global superpower, marginalized communities must be uplifted: Mohan Bhagwat

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.