
அயோத்தி நன்கொடை முறைகேடு! சிவசேனை போராட்டத்துக்கு மோகன் பாகவத்துக்கு அழைப்பு!
சிவசேனை போராட்டத்துக்கு மோகன் பாகவத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது பற்றி...

உத்தவ் தாக்கரே | மோகன் பாகவத் - ANI
அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேட்டைக் கண்டித்து, நாக்பூரில் சிவசேனை (உத்தவ்) நடத்தும் போராட்டத்தில் கலந்துகொள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற பிரயாக்ராஜ் கும்பமேளாவின்போது ராமா் கோயிலில் தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வழிபட்டனா். அப்போது, பக்தா்களால் வழங்கப்பட்ட தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்ட காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் பல்வேறு நகரங்களில் ராமா் கோயில் நன்கொடை முறைகேட்டைக் கண்டித்து ‘ராமா் பாதுகாப்பு’ போராட்டத்தை சிவசேனை (தாக்கரே) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே நடத்தி வருகிறார்.
கடந்த வாரம் மும்பையில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், நாக்பூரில் நாளை (ஜூலை 18) உத்தவ் தாக்கரே தலைமையில் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்துக்கு போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிவசேனை (தாக்கரே) கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரெளத், மோகன் பாகவத்துக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்காக அளிக்கப்பட்ட நன்கொடைகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தனது 'வேதனையை' வெளிப்படுத்தியிருந்தது. இருப்பினும், இந்தத் திருட்டு வழக்கில் முக்கியக் குற்றவாளி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அயோத்தியில் நடந்த இந்தத் திருட்டுச் சம்பவம் ஹிந்துக்களின் நம்பிக்கையையும் மன உறுதியையும் உலுக்கியுள்ளது. ஹிந்து சமூகத்திற்குப் புத்துயிர் அளிப்பது அவசியமாகும். ராமர் கோயில் நன்கொடைத் திருட்டு விவகாரம் குறித்து ஹிந்துக்களிடையே நிலவும் நம்பிக்கையை மாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சிவசேனை கட்சி மாநிலம் முழுவதும் ராமர் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்த இயக்கத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு நாக்பூரில் நடைபெறவுள்ள நிலையில், உங்களுக்கு இந்த அழைப்பை விடுக்கிறோம்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் ராம பக்தர்களை ஆசீர்வதிக்குமாறு அழைப்பு விடுக்கிறோம். உங்கள் வருகை மிகவும் மதிக்கத்தக்கது; எனினும், ஏதேனும் காரணத்தினால் உங்களால் நேரில் பங்கேற்க இயலவில்லை என்றால், உங்கள் சார்பாக ஒரு பிரதிநிதியை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, நாக்பூரைச் சேர்ந்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸுக்கும் சிவசேனை கட்சி அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
परम à¤à¤¦à¤°à¤£à¥à¤¯ शà¥à¤°à¥ मà¥à¤¹à¤¨à¤°à¤¾à¤µ à¤à¤¾à¤à¤µà¤¤ à¤à¥,
— Sanjay Raut (@rautsanjay61) July 17, 2026
à¤à¤ªà¤²à¥ à¤à¤¶à¤¿à¤°à¥à¤µà¤¾à¤¦ हवà¥à¤¤!
â¦@Rssorg_officialâ© pic.twitter.com/FqPuDHKNuh
Summary
Ayodhya donation irregularities! Mohan Bhagwat invited to Shiv Sena protest!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







