ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உதயநிதி கைது: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் முழக்கம்!

உதயநிதி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் முழக்கமிட்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் முழக்கம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 11:25 am IST

உதயநிதி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் முழக்கமிட்டனர்.

காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இழிவாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் உதயநிதி மீது தவெக மகளிரணியினர், தஞ்சாவூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சென்னை நீலாங்கரை வீட்டிலுள்ள உதயநிதி ஸ்டாலினை கைது செய்வதற்காக தஞ்சாவூர் போலீசார், சென்னை போலீசாருடன் வந்திருந்தனர்.

இதனிடையே, உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ததைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை பகல் 12 மணி வரை கைது நடவடிக்கை கூடாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால், விசாரணைக்காக உதயநிதி ஸ்டாலினை கைது செய்து தஞ்சாவூருக்கு போலீஸ் வாகனம் மூலம் அழைத்துச் செல்கின்றனர்.

உதயநிதி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் முழக்கமிட்டனர்.

டி.ஆர்.பாலு, ஆ. ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், திருச்சி சிவா உள்பட திமுக எம்பிக்கள் அனைவரும் ‘கைது செய்யாதே கைது செய்யாதே’ என முழக்கமிட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

Summary

Udhayanidhi's arrest DMK MPs raise slogans in Parliament complex

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.