ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக தனிக் கச்சேரி!

நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம் நடத்தியது பற்றி...

Parliament Protest

நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம் - X

Published On :23 ஜூலை 2026, 1:22 pm IST

நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக எம்.பி.க்கள் தனியாகப் போராட்டம் நடத்தினர்.

மேலும், அவர்கள் கையிலிருந்த பதாகைகளில் மத்திய அரசுக்கு எதிராகவும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரியும் எந்த வாசகமும் இடம்பெறாதது பேசுபொருளாகியுள்ளது.

நீட் தேர்வுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜிநாமா செய்யக் கோரி போராடிய சிஜேபி கட்சியின் இளைஞர்கள், மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜிநாமா செய்யக் கோரியும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், சமாஜவாதி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி), திரிணமூல் காங்கிரஸ் (மமதா பானர்ஜி அணி) உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிலிருந்து விலகிய திமுக எம்பிக்கள், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் தனியாக போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தின் போது, திமுக எம்பிக்கள் கைகளில் இருந்த பதாகைகளில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவர்களை காக்க வேண்டும் என்ற வாசகங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது.

மேலும், ’வேண்டாம், வேண்டாம், நீட் தேர்வு வேண்டாம்’, ‘மத்திய அரசே, மத்திய அரசே, மாணவர்களை அடிக்காதே’ என்று திமுக எம்பிக்கள் கோஷமிட்டனர்.

ஆனால், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் முக்கிய கோரிக்கையான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா தொடர்பாக திமுக எம்பிக்களின் பதாகைகளில் வாசகங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

DMK stages a solo protest in Parliament against the NEET exam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.