ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இந்தியா - இத்தாலி நட்பை கொண்டாடும் புதிய ‘மெலோடி’ சாக்லேட்! லிமிடெட் எடிஷன்!

இந்தியா - இத்தாலி நட்பைக் கொண்டாடும் புதிய ‘மெலோடி’ சாக்லேட் பற்றி...

Melody Tiramusu

மெலோடி டிராமிசு சாக்லேட் - Photo: X, Blinkit

Published On :3 ஆகஸ்ட் 2026, 12:25 pm IST

இந்தியா - இத்தாலி நட்பைக் கொண்டாடும் வகையில் புதிய ‘மெலோடி’ மிட்டாயை பார்லே நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த மே மாதம், அரசு முறைப் பயணமாக ரோம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மொலோனிக்கு மெலோடி சாக்லேட்டுகளை பரிசாக வழங்கிய விடியோ இணையத்தில் வைரலானது.

மெலோனி மற்றும் மோடி என இருவரின் பெயர்களையும் சேர்த்தால், மெலோடி என வருவதாக இணையத்தில் பலர் கருத்துகளை பகிர்ந்து வந்த நிலையில், மெலோடி சாக்லேட்டை பிரதமர் மோடி வழங்கியிருந்தார்.

இதையடுத்து பார்லே நிறுவனத்தின் மெலோடி சாக்லேட் சர்வதேச அளவில் ட்ரெண்டான நிலையில், அந்நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்தன.

இந்த நிலையில், நண்பர்கள் தினத்தை (ஆகஸ்ட் 2) முன்னிட்டு, இந்தியா - இத்தாலியின் நட்புறவை கொண்டாடும் விதமாக, புதிய மெலோடி சாக்லேட்டை பார்லே நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

லிமிட்டெட் எடிஷனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ’மெலோடி டிராமிசு’ சாக்லேட்டின் பாக்கெட்டில், ‘Celebrating India and Italy Friendship' (இந்தியா - இத்தாலி நட்புறவைக் கொண்டாடுகிறோம்) என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

டிராமிசு என்றால் என்ன?

டிராமிசு என்பது காபியில் ஊறவைத்த பஞ்சு போன்ற பிஸ்கட் வகை, மஸ்கார்போன் சீஸ் கிரீம் மற்றும் கோகோ தூள் கொண்டு செய்யப்படும் ஒரு பிரபலமான இத்தாலி இனிப்பு வகையாகும்.

இத்தாலி நட்புறவைக் கொண்டாடும் வகையில், டிராமிசு சுவையில் மெலோடி சாக்லேட்டை பார்லே நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த டிராமிசு மேலோடி சாக்லேட்டின் லிமிட்டெட் வெர்சன், பிளிங்கிட் (Blinkit) இ-வணிக சேவை செயலியில் மட்டுமே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகை த்ரிஷா பதிவிட்ட புகைப்படத்தில் ’டிராமிசு’ கேக் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.