மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

த்ரிஷா கொடுத்த டிராமிசு கேக் ஹைதராபாத்-ல் மட்டும் கிடைக்குமா? என்ன ஸ்பெஷல்?

நடிகை த்ரிஷா, முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளில் கொடுத்த டிராமிசு கேக் ஹைதராபாத்-ல் மட்டுமே கிடைக்கும் என்று தகவல்..

News image
Updated On :25 ஜூன் 2026, 6:02 pm IST

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் முடிந்து மூன்று நாள்கள் ஆகப்போகிறது. ஆனாலும் அந்த ஒற்றைப் புகைப்படம் சமூக வலைத்தளத்தையே ஆட்டிவைக்கிறது.

முதல்வர் விஜய்க்கு, த்ரிஷா பரிசளித்த கேக் வகைகளில், மிகவும் சிறப்பானதாக இருப்பது ஒன்றுபோல வைக்கப்பட்டிருந்த மூன்று கோன்சு டிராமிசு வகை கேக்குகள்தான்.

த்ரிஷா பகிர்ந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் கேக்குகளை உணவுப் பிரியர்கள் பலரும் கூகுளில் தேடிக் கண்டுபிடிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதில், மூன்று சிறிய கேக்குகள் அனைத்தும் டிராமிசு வகையைச் சேர்ந்தவை. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட 'கான்சு' கேக் கடையின் பிரத்யேகமான தயாரிப்பு என்பதையும் கண்டறிந்துவிட்டனர்.

விமானத்தில் வந்திருக்குமா?

ஹைதராபாத்திலிருந்து அந்த கேக்குகள் எப்படி சென்னை வந்தன என்றும் அடுத்தடுத்த கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு இப்போது நம்மிடம் விடையில்லை.

டிராமிசு (Tiramisu) வகை கேக்குகளுடன், உண்மையான மாம்பழத்தின் கூழ் மற்றும் துண்டுகளைக் கொண்டு செய்யப்படும் மாம்பழ வெண்ணிலா கேக் சென்னையைச் சேர்ந்த கடையிலிருந்தும், ஸ்ட்ராபெரி ஒயிட் சாக்லேட் கேக் சென்னையில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற கேக் நிறுவனத்திடமிருந்தும் வாங்கியிக்கிறார்.

த்ரிஷா வெளியிட்ட இந்தப் புகைப்படத்தால் இதில் சம்பந்தப்பட்ட கேக் நிறுவனங்களுக்கு அதிக கேக் ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றனவாம். அதுவும் பெரும்பாலும் த்ரிஷா கொடுத்த அதே கேக்குகள்தான் நாள்தோறும் கிட்டத்தட்ட 50 வரை விற்பனையாகிறதாம்.

ஹைதராபாத்திலும் கேக் தீ!

ஜூலை 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாவில் புகைப்படத்தைப் பகிர, ஹைதராபாத்தில் உள்ள அந்த சம்பந்தப்பட்ட கடைக்கு ஒரு சில நிமிடங்களில் எல்லாம் இந்த டிராமசு கேக் கேட்டு ஆன்லைனில் ஆர்டர்கள் குவியத் தொடங்கிவிட்டதாம்.

சென்னையிலிருப்பவர்களுக்குத்தான் இது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் ஹைதராபாத்தில் இருப்பவர்களுக்கு இந்தக் கடை பற்றியும் கேக் பற்றியும் தெரிந்திருக்கும் அல்லவா?

ஆர்டர்கள் குவிவதைப் பார்த்தப் பிறகுதான் அவர்களுக்கு, முதல் டிராமசு கேக் ஆர்டர் கொடுக்கப்பட்டது நடிகை த்ரிஷாவால், அது முதல்வர் விஜய்காக வாங்கப்பட்டது என்பதே தெரியுமாம்.

சரி இரண்டு, மூன்று நாள்கள் ஆகிவிட்டதே, ஆர்டர்கள் வருவது குறைந்திருக்கிறதா? என்றால் இல்லையாம். அன்று முதல் அனைத்து ஊழியர்களும் நிக்க நேரமின்றி கேக் தயாரித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

அதுவும் வார இறுதி நாள்களில் அதிகம் தேவைப்படும் என்பதால் இப்போதே அதற்கும் தயாராகி வருகிறார்களாம்.

ஏற்கனவே இந்த நிறுவனத்தின் கிளைகள் பெங்களூரு மற்றும் மும்பையிலும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறதாம். விரைவில் சென்னையிலும் தொடங்கவிருக்கிறார்களாம்.

Summary

Is the Tiramisu cake Trisha gave available only in Hyderabad? What makes it special?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.