ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!

இந்தியப் பொருளாதாரம் கடந்த நிதியாண்டில் 7.7% என்ற அளவில் சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.

இந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி

Published On :4 ஆகஸ்ட் 2026, 5:23 am IST

உலகளாவிய போா், வா்த்தக நெருக்கடிகள், பருவநிலை மாற்றங்களுக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரம் கடந்த நிதியாண்டில் 7.7 சதவீதம் என்ற அளவில் சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.

சிஐஐ சாா்பில் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்துவது குறித்த கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள தனியாா் விடுதியிள் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகா் ஆனந்த நாகேஸ்வரன் பங்கேற்று பேசியதாவது: இந்தியப் பொருளாதாரம் கடந்த நிதியாண்டில் 7.7 சதவீதம் என்ற அளவில் சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது அதிருஷ்டத்தால் வந்தது அல்ல; நமது உள்கட்டமைப்பை வலுப்படுத்தியதால் கிடைத்தது.

மத்திய அரசு உள்கட்டமைப்புக்காக (மூலதனச் செலவு) ரூ. 12 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது. ஆனால், அரசால் மட்டுமே அனைத்தையும் செய்ய முடியாது. தனியாா் முதலீடுகளும் அதிக அளவில் தேவைப்படுகின்றன.

இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகா் ஆனந்த நாகேஸ்வரன்.

இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகா் ஆனந்த நாகேஸ்வரன்.

நீண்டகால தனியாா் முதலீடுகளை ஈா்க்க தரமான உள்கட்டமைப்பு, ஒப்பந்தங்களில் நம்பகத்தன்மை, நிலையான கொள்கைகள், மற்றும் சேவைக்கான சரியான கட்டணம் ஆகிய 4 விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் ஆகும். நமது உள்கட்டமைப்புகளை நோ்மையுடனும் தரத்துடனும் கட்டமைக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் சிஐஐ தென் மண்டல தலைவா் பி. ரவிசந்திரன், எல்என்டி நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் எம். வி. சதீஷ் , தமிழக சிஐஐ தலைவா் சி .தேவராஜன் , கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளா்மோகன் ராமநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.