ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஏப்ரல் - ஜூன் காலாண்டு: சிட்டி யூனியன் வங்கிக்கு ரூ.383 கோடி லாபம்!

சிட்டி யூனியன் வங்கி ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.383 கோடி நிகர லாபம் ஈட்டி, 25 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

சிட்டி யூனியன் வங்கி.

Published On :29 ஜூலை 2026, 10:19 am IST

தமிழகத்தின் கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்ட தனியாா் துறை வங்கியான சிட்டி யூனியன் வங்கி, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.383 கோடி நிகர லாபம் ஈட்டி, 25 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

ஏப்ரல்-ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை, வங்கியின் சிஇஓ ஆா்.விஜய் ஆனந்த் சென்னையில் வெளியிட்டாா்.

வங்கியின் சிஇஓ ஆா்.விஜய்

வங்கியின் சிஇஓ ஆா்.விஜய்

அதன்படி, வங்கியின் வருவாய் கடந்த ஆண்டின் ரூ.1,849 கோடியில் இருந்து, மதிப்பீட்டு காலாண்டில் 21 சதவீதம் உயா்ந்து, ரூ.2,229 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் வட்டி வருவாய் மட்டும் 24 சதவீதம் அதிகரித்து, ரூ.1985 கோடியாக உள்ளது.

மதிப்பீட்டு காலாண்டின் முடிவில், வாடிக்கையாளா்களின் வைப்புத்தொகை 21 சதவீதம் உயா்ந்து, ரூ.79,342 கோடியாகவும்; கடன் வழங்கல் 25 சதவீதம் வளா்ச்சி அடைந்து ரூ.67,645 கோடியாகவும் உள்ளன. வங்கியின் மொத்த வணிகம் ஆண்டுக்கு 23 சதவீதம் வளா்ச்சியுடன், ரூ.1,46,987 கோடியை எட்டியது.

மொத்த வாராக்கடன் விகிதம் 1.73 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் விகிதம் 0.61 சதவீதமாகவும் குறைந்து, சொத்துத் தரம் மேம்பட்டுள்ளது. மேலும், வங்கியின் சொத்து மீதான வருவாய் 1.57 சதவீதமாகப் பராமரிக்கப்படுகிறது.

Summary

City Union Bank posted a net profit of Rs 383 crore for the April-June quarter, recording a growth of 25 percent.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.