ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மகாராஷ்டிர வங்கி லாபம் ரூ. 2,020 கோடி

மகாராஷ்டிர வங்கி லாபம் ரூ. 2,020 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

Published On :12 ஜூலை 2026, 5:09 am IST

புணேவைத் தலைமையிடமாகக் கொண்ட பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான மகாராஷ்டிர வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) ரூ.2,020 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கியின் ரூ.1,593 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 27 சதவீதம் வளா்ச்சியாகும்.

மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.9,063 கோடியாக உயா்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.7,879 கோடியாக இருந்தது. வட்டி வருவாய் கடந்த நிதியாண்டின் ரூ.7,054 கோடியில் இருந்து, தற்போது ரூ.8,037 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது.

வங்கியின் மொத்த வாராக்கடன் கடந்த ஆண்டு 1.74 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 1.45 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வாராக்கடன் 0.18 சதவீதத்திலிருந்து 0.13 சதவீதமாக சரிந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.