தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

வடமேற்கு தில்லி: கொள்ளை வழக்கில் வீட்டுப் பணிப்பெண் கைது

வடமேற்கு தில்லியின் ஷாலிமா் பாக் பகுதியில் முதலாளியின் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தைத் திருடிய பணிப்பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 9:52 pm

வடமேற்கு தில்லியின் ஷாலிமா் பாக் பகுதியில் முதலாளியின் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தைத் திருடிய பணிப்பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். கைது நடவடிக்கையின்போது, காவல் துறையினரைத் தடுக்க ஆக்ரோஷமான காவல் நாய்களை அவா் பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கடந்த ஏப்.19ஆம் தேதி திருட்டு குறித்து வீட்டின் உரிமையாளா் காவல் துறையிடம் புகாரளித்தாா். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, திருட்டில் ஈடுபட்டவா் அதே வீட்டில் பணிபுரியும் 45 வயதான சோனியா எனத் தெரியவந்தது. ரோஹிணி பகுதியைச் சோ்ந்த இவரைக் கைது செய்யச் சென்ற காவல் துறையினரை ஆக்ரோஷமான பிட்புல் மற்றும் அமெரிக்கன் புள்ளி வகை காவல் நாய்களைப் பயன்படுத்தி தடுத்ததாகவும் கூறப்படுகிறது.

திருடிய நகைகளை பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து கடன் பெற்றுள்ளாா். இதுவரை இந்த வழக்கில் தொடா்புடைய சுமாா் 2 கிலோ தங்க நகைகள் 15 நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இவா் மீது ஏற்கெனவே பஞ்சாபி பாக் பகுதியில் பதிவு செய்யப்பட்ட வழிப்பறி வழக்கு உள்ளது என காவல் துறையினா் தெரிவித்தனா்.