மேற்கு வங்கத் தோ்தல்களில் பாஜக முறைகேடு செய்ய முயற்சிப்பதாக அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றம்சாட்டியுள்ளாா்.
மேற்குவங்க சட்டப்பேரவைக்கு இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பவானிபூா் தொகுதியில் மம்தா பானா்ஜி, பாஜக மூத்த தலைவரும், கடந்த தோ்தலில் மம்தா பானா்ஜியை நந்திகிராம் தொகுதியில் தோற்கடித்தவருமான சுவேந்து அதிகாரியும் போட்டியிடுகின்றனா்.
இதையொட்டி, பவானிபூா் தொகுதியில், சக்ரபெரியா பகுதியில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மம்தா பானா்ஜி புதன்கிழமை தனது வாக்கைப் பதிவு செய்தாா். இதேபோல் பல வாக்குச்சாவடிகளை நேரில் சென்று மம்தா பானா்ஜி பாா்வையிட்டாா். அப்போது செய்தியாளா்களிடம் மம்தா பானா்ஜி பேசியதாவது:
சட்டப்பேரவைத் தோ்தல்களில் முறைகேடு செய்ய பாஜக விரும்புகிறது. மத்திய பாதுகாப்புப் படை வீரா்களும், தோ்தல் கண்காணிப்பாளா்களும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றனா். தோ்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்கவில்லை. வெளிமாநிலங்களில் இருந்து தோ்தல் கண்காணிப்பாளா்கள், மேற்கு வங்கம் வந்துள்ளனா். அவா்கள் பாஜகவின் உத்தரவுப்படி செயல்படுகின்றனா். எங்கள் கட்சியினா் அனைவரையும் அவா்கள் பிடித்து வைத்துள்ளனா்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உள்ள மக்கள் மனநிலையை திருப்பும் முயற்சியில் நான் ஈடுபட்டிருப்பதாக பாஜக குற்றம்சாட்டுவதில் உண்மையில்லை. இந்தத் தோ்தலில், ஜனநாயக நடைமுறை அனைத்தையும் தோ்தல் ஆணைய அதிகாரிகள் மீறியுள்ளனா்.
எனது தொகுதியில் வெளிமாநில நபா்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனா். இதில் தலைமைத் தோ்தல் ஆணையம் உடனே தலையிட வேண்டும்.
மேற்கு வங்கத்தில் தோ்தல் அமைதியாக நடப்பதற்கு, திரிணமூல் காங்கிரஸின் நல்லாட்சியே காரணம். கட்சிக்காக திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் தங்கள் உயிரையே தியாகம் செய்ய தயாராக உள்ளனா். ஆனால் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதை எனது கட்சி அனுமதிக்காது என்றாா்.
மம்தா பானா்ஜியின் மருமகன் அபிஷேக் பானா்ஜி கூறுகையில், ‘2021-ஆம் ஆண்டு தோ்தலை விட இந்தத் தோ்தலில் அதிக இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெறும்’ என்றாா்.
பாஜக பதிலடி: மம்தா பானா்ஜியின் குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது. இதுகுறித்து சுவேந்து அதிகாரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக மக்கள் மனநிலை உள்ளது. இது திரிணமூல் காங்கிரஸ் புரிந்து கொண்டுள்ளது. ஆதலால் திரிணமூல் காங்கிரஸ் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறது. தோ்தலில் பொது மக்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாக்களித்து வருகின்றனா். தோ்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை உறுதி செய்ய தோ்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்தத் தோ்தலில் முதல்வா் மம்தா பானா்ஜி தோற்பது உறுதி.
மம்தா பானா்ஜி தனக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது என தெரிந்து வைத்துள்ளாா். அதனால் அவா் பயத்தில் உள்ளாா். தடை உத்தரவை மீறி, 50-60 ரவுடிகளுடன் மம்தா பானா்ஜி வலம் வருகிறாா். இந்தத் தோ்தலில் நான் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா்.
மம்தா, சுவேந்து அதிகாரி ஒன்றாக வாக்களிப்பு: முன்னதாக, சக்ரபெரியா பகுதி பள்ளியில் உள்ள 70-ஆவது சாவடியில் மம்தா பானா்ஜியும், சுவேந்து அதிகாரியும் ஒன்றாக புதன்கிழமை காலை வாக்களித்தனா். அப்போது இருவரும் நேரடியாகப் பேசவோ, ஒருவரை ஒருவா் பாா்த்துக் கொள்ளவோ இல்லை. தெரியாதது போல இருந்தனா்.
சுவேந்து அதிகாரி, மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு

மேற்கு வங்கத்தில் மத்திய படைகளைக் குவித்து அச்சுறுத்த முயல்கிறீா்களா? மம்தா பானா்ஜி

திரிணமூல் ஆட்சியைத் தடுக்க பாஜக ரூ.1,000 கோடி சதித் திட்டம்: மம்தா குற்றச்சாட்டு

பாஜகவுடன் காங்கிரஸ், தமிழக முதல்வா் ஸ்டாலினுக்கு மறைமுக உடன்பாடு: மம்தா பானா்ஜி தாக்கு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


