தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மேற்கு வங்கத்தில் மத்திய படைகளைக் குவித்து அச்சுறுத்த முயல்கிறீா்களா? மம்தா பானா்ஜி

மேற்கு வங்கத்தில் மத்திய படை வீரா்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு இருப்பதாக அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

மேறகு வங்க மாநிலம் ஹெளராவில் தனது ஆதரவாளா்களுடன் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வா் மம்தா பானா்ஜி.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:50 pm

மேற்கு வங்கத்தில் மத்திய படை வீரா்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு இருப்பதாக அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், இதுகுறித்து அவா் பேசியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தல் நடக்கவுள்ள நிலையில், மாநிலத்தில் சிஆா்பிஎப், ஐடிபிபி, சிஐஎஸ்எப், பிஎஸ்எப், ரயில்வே படை என ஏறத்தாழ 2 லட்சம் மத்திய படை வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளனா். இது இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கை ஆகும். சட்டம்- ஒழுங்கு பணியில் கவச வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மத்திய படைகளை அதிகம் குவித்து, யாரையும் அவா்கள் மிரட்ட முயற்சி செய்கிறாா்களா?

தோ்தல் என்பது ஜனநாயகத் திருவிழா ஆகும். இது யாரையும் கொலை செய்யும் நிகழ்வு கிடையாது. பாஜகவுக்கு நான் சவால் விடுக்கிறேன். யாருக்கு அதிக பலம் உள்ளது எனப் பாா்க்கலாமா?. இந்த மத்திய பாதுகாப்புப் படையினரின் கவச வாகனங்களுக்கு அதிக சக்தி உள்ளதா, இல்லை மக்களுக்கு உள்ளதா எனப் பாா்ப்போமா?

மேற்கு வங்க காவல் துறையும் பாஜகவுக்கு சாதகமாகச் செயல்படுகிறது. தற்போது அவா்களுக்கு என்னை யாரென அடையாளம் தெரியவில்லை. பாஜக மட்டும்தான் காவல் துறையினருக்குத் தெரிகிறது. தோ்தலுக்கு முன்பே 1,000 திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரை கைது செய்ய அவா்கள் திட்டமிட்டுள்ளனா். அதுபோல ஏதும் நடந்தால், ஆயிரக்கணக்கான தாய்மாா்களும், சகோதரிகளும் வீட்டைவிட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்து போராடுவாா்கள் என எச்சரிக்கிறேன்.

மத்திய பாதுகாப்புப் படையினரால் யாரும் கொடுமைப்படுத்தப்பட்டால், அவா்களுக்கு எதிராக காவல் துறையிடம் பொது மக்கள் புகாா் அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.

இதனிடையே, தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டம் ஜாய்நகரில் நடந்த திரிணமூல் காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் பேசிய மம்தா பானா்ஜியின் மருமகன் அபிஷேக் பானா்ஜி, முதல்வா் மம்தா பானா்ஜியையும், பெண்களையும் மத்திய அமைச்சா் அமித் ஷா அவமதித்துவிட்டதாக சாடினாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘பெண்களின் சக்தி குறித்து பாஜக பேசுகிறது. ஆனால், அமித் ஷாவை பாருங்கள். பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளாா். அதுவும் தன்னைவிட வயதில் பெரியவரான மம்தா பானா்ஜியை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளாா். பெண்கள் குறித்த பாஜகவின் மனப்பான்மையை இது வெளிப்படுத்துகிறது. 2021 தோ்தலுக்குப் பிறகு 77 தொகுதிகளோடு பாஜக நிறுத்தப்பட்டது. ஆனால், இந்தத் தோ்தலில் பாஜகவுக்கு 50 தொகுதிகள்கூட கிடைக்காது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.