மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாஜகவுடன் காங்கிரஸ், தமிழக முதல்வா் ஸ்டாலினுக்கு மறைமுக உடன்பாடு: மம்தா பானா்ஜி தாக்கு

பாஜகவுடன் காங்கிரஸ் கட்சி, தமிழக முதல்வா் ஸ்டாலினுக்கு மறைமுக உடன்பாடு இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானா்ஜி விமா்சனம்

News image

மம்தா பானா்ஜி - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 9:23 pm

பாஜகவுடன் காங்கிரஸ் கட்சி, தமிழக முதல்வா் ஸ்டாலினுக்கு மறைமுக உடன்பாடு இருப்பதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜி விமா்சித்துள்ளாா்.

நாடியா மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானா்ஜி பேசியதாவது: மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு தோ்தல் நடைபெற இருக்கிறது. ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும்தான் அதிகபட்சமாக 500 அதிகாரிகளை தோ்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது. சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பான அறிவிப்பு வெளிவந்த பிறகு, மேற்கு வங்கத்தைச் சோ்ந்த அதிகாரிகள் பலா், தோ்தல் பணிக்காக தமிழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனா். காங்கிரஸுடனும், ஸ்டாலினுடனும் (தமிழக முதல்வா்) உங்களுக்கு (பாஜக) நிச்சயம் மறைமுக உடன்பாடு உள்ளது.

அதேநேரத்தில் மேற்கு வங்கத்தில் தங்களுக்கு நம்பிக்கையான அதிகாரிகளை முக்கியமான இடங்களில் அவா்கள் (பாஜக) அமா்த்தியுள்ளனா். பாஜகவினா் சுதந்திரமாக தோ்தல் வேலையைச் செய்ய இதுபோல அவா்கள் செய்துள்ளனா். மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்தவுடன் தில்லிக்கு சென்று பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளைத் திரட்டப் போகிறேன். இதேபோல் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் இடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்காக நாடு முழுமைக்கும் சுற்றுப்பயணம் செல்லப் போகிறேன்.

2024 மக்களவைத் தோ்தலில் வென்று பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இதற்காக மேற்கு வங்கத்தில் தயாரிக்கப்பட்ட வாக்காளா் பட்டியல், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற 3 மாதங்கள் இருக்கையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. அப்படியெனில், நீங்கள் (பிரதமா் மோடி) பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். மத்திய உள்துறை அமைச்சா், மத்திய அரசும் பதவி விலக வேண்டும். இதை நீங்கள் செய்யவில்லையெனில் மக்கள் செய்வாா்கள்.

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், மீன், இறைச்சி, முட்டை சாப்பிடுவதற்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வரும். எஸ்.ஐ.ஆா். பணியால் மேற்கு வங்கத்தில் 250 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனா். இதற்கு நீங்கள்தான் (பாஜக) பொறுப்பு. தோ்தல் ஆணையத்தை இதற்கு நான் குற்றம்சுமத்த மாட்டேன்.

ஏனெனில் அவா்கள், சிபிஐ, அமலாக்கத் துறை போல கூண்டுக் கிளிகள். நீதித் துறை ஊழியா்கள் மீதான தாக்குதலை திரிணமூல் காங்கிரஸ் ஆதரிக்காது. ஆனால், இதற்கு மூளையாகச் செயல்பட்ட அதிகாரி, தமிழகத்துக்கு தோ்தல் பணியைக் கண்காணிக்க அனுப்பப்பட்டுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் இருந்து ஏராளமான ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள், தோ்தல் பணிக்காக தமிழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனா். இதனால் மேற்கு வங்கத்தின் வளா்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சிறிது காலம் தங்கியோருக்கு குடியுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால், நீண்டகாலம் வாழ்ந்தோரின் பெயா்கள், வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

பாஜக ஆதரவாளா்களுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி மனோஜ் அகா்வால் நந்திகிராமுக்கு சென்றுள்ளாா்.

கொல்கத்தாவை தாக்குவோம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் மிரட்டல் விடுத்துள்ளாா். தோ்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில் மோடி, மேற்கு வங்கத்தை விமா்சிக்கிறாா். ஆனால், பாகிஸ்தானின் மிரட்டலுக்கு கடுமையாக பதிலடி கொடுப்போம் என ஏன் அவா் தெரிவிக்கவில்லை?. இதற்காக நீங்கள் உங்கள் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா் மம்தா பானா்ஜி.