மேற்கு வங்க மாநில வாக்காளா்களை முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜியும், அவரது கட்சித் தலைவா்களும் மிரட்டுவதாக தலைமைத் தோ்தல் ஆணையத்திடம் பாஜக புகாா் அளித்துள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு வருகிற ஏப்ரல் மாதம் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. இந்தத் தோ்தலையொட்டி, அரசியல் கட்சித் தலைவா்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனா்.
இந்நிலையில், தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கு பாஜக தலைவா்களும் மத்திய அமைச்சா்களுமான கிரண் ரிஜிஜு, பியூஷ் கோயல், சுகாந்த மஜும்தாா், பாஜக செய்தித் தொடா்பாளா் அனில் பலூனி, மாநிலங்களவை எம்.பி. அா்ஜுன் சிங் ஆகியோா் கொண்ட பாஜக குழு திங்கள்கிழமை வந்தது. பின்னா், தலைமை தோ்தல் ஆணையத்தில், மேற்கு வங்க தோ்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாதென மம்தாவும், திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களும் மிரட்டுவதாக பாஜக தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.
மேலும், மேற்கு வங்க காவல் துறையால் நிலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை, ஆதலால் முக்கிய மற்றும் பதற்றமான இடங்களில் மத்திய பாதுகாப்புப் படைகளை நிறுத்த வேண்டும் என்றும், தோ்தல் பிரசாரம் செய்ய மம்தா பானா்ஜிக்கும், பிற திரிணமூல் தலைவா்களுக்கும் தடை விதிப்பதோடு, அவா்களுக்கு எதிராக வழக்குப் பதிய செய்ய உத்தரவிட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
இதன்பிறகு செய்தியாளா்களிடம் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசுகையில், ‘சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு வாக்களித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என வாக்காளா்களை மம்தா, அமைச்சா்கள், திரிணமூல் தொண்டா்கள் மிரட்டுகின்றனா்.
இதுகுறித்து தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்தோம். இதற்கு தோ்தல் ஆணையம் தரப்பில் சாதகமான பதில் அளிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் நோ்மையான, வெளிப்படையான தோ்தல் நடக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தோ்தல் ஆணையம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது’ என்றாா்.
தொடர்புடையது

திரிணமூல் ஆட்சியைத் தடுக்க பாஜக ரூ.1,000 கோடி சதித் திட்டம்: மம்தா குற்றச்சாட்டு

எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

தோ்தலின்போது வெளி மாநிலத்தவரை அழைத்துவர பாஜக முயற்சி: மம்தா

மேற்கு வங்க தோ்தல்: 291 திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிப்பு- பவானிபூரில் மம்தா மீண்டும் போட்டி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


