வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் பெற வைத்ததா பாஜக? குஜராத் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி.

Updated On :28 ஏப்ரல் 2026, 1:11 pm

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாதது ஏன்? என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

குஜராத் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதிகளவில் யாரும் விறுவிறுப்பு காட்டாத நிலையில், நகர்ப் பகுதிகளில் 50 சதவிதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவாகின. அகமதாபாத், சூரத், வதோதரா உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 84 நகராட்சிகள், 34 மாவட்ட பஞ்சாயத்துகள், 260 தாலுகா பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

மாநகராட்சிப் பகுதிகளில் 48.55 சதவிகிதம், நகராட்சிகளில் 58.12 சதவிகிதம், மாவட்ட பஞ்சாயத்துகளில் 60.22 சதவிகிதம், தாலுகா பஞ்சாயத்துகளில் 61.08 சதவிகித வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஏப்.28) காலை எண்ணப்பட்டன.

தொடக்கம் முதலே ஆளும் பாஜக முன்னிலை வகித்தது. ஒன்று இரண்டு இடங்கள் என்றில்லாமல், மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளிலும் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். 84 நகராட்சிகளில் (2,030 இடங்கள்), பாஜக 1,791 இடங்களையும், காங்கிரஸ் 414 இடங்களையும், மற்றவர்கள் 144 இடங்களையும் வென்றனர்.

34 மாவட்ட பஞ்சாயத்துகளில் 1,090 இடங்களில் பாஜக 568 இடங்களையும், காங்கிரஸ் 77 இடங்களையும், மற்றவர்கள் 30 இடங்களையும் வென்றனர். 260 தாலுகா பஞ்சாயத்துகளில் 5,234 இடங்களில் பாஜக 2,397 இடங்களையும், காங்கிரஸ் 591 இடங்களையும், மற்றவர்கள் 329 இடங்களையும் வென்றனர்.

இதில், தேர்தலுக்கு முன்னதாக, பாஜகவினர் போட்டியிடும் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட பலர் தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதனால், 730 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநகராட்சிகளில் 43 இடங்கள், நகராட்சிகளில் 385 இடங்கள், மாவட்ட பஞ்சாயத்துகளில் 51 இடங்கள் மற்றும் 251 தாலுகா பஞ்சாயத்துகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பாஜகவுக்கு வேட்பாளர்களுக்கு எதிராக தங்கள் மனுக்களைத் திரும்ப பெற்றுள்ளனர்.

அகமதாபாத்தில் பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள் பலரும் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற கூறி மிரட்டப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. அகமதாபாத்தில், பல காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

வேட்பாளர்களில் ஒருவரான பீனா மோடி, தனது வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்காக சுமார் ரூ. 30 லட்சம் வழங்கப்பட்டதாக விடியோ வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார்.

மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மையா? இல்லையா? என நிரூபிக்கப்படாத நிலையில், பாஜக வேட்பாளர்கள் 730 பேருக்கு எதிராக யாரும் போட்டியிடாமல் போட்டியின்றித் தேர்வாகியிருப்பது பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

Summary

In Gujarat's Local Body Elections, a jaw-dropping 730 Candidates have been Elected Completely Unopposed. meaning 0 Votes were even cast against them!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.