மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஐ.நா. பொதுச் செயலருடன் இந்திய வெளியுறவு அதிகாரி சந்திப்பு

News image

ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை மேற்குப் பிரிவுச் செயலா் சிபி ஜாா்ஜ்.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:21 am IST

அமெரிக்காவில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை இந்திய வெளியுறவுத் துறையின் மேற்குப் பிரிவுச் செயலா் சிபி ஜாா்ஜ் சந்தித்துப் பேசினாா்.

இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா.பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை, இந்திய வெளியுறவு அமைச்சக மேற்குப் பிரிவுச் செயலரும் தூதருமான சிபி ஜாா்ஜ் சந்தித்துப் பேசினாா்.

பல நாடுகள் ஒன்றிணைந்து பொதுவான இலக்கை எட்ட முயற்சிப்பதில், இந்தியா மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளதாக குட்டெரெஸிடம் சிபி ஜாா்ஜ் தெரிவித்தாா்.

ஐ.நா. சீா்திருத்தங்கள், தெற்குலகுக்கு வலுவான குரலை ஏற்படுத்துவது குறித்து இருவரும் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.