மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புடன் இணைப்பது மூலம், மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தாமல் தாமதப்படுத்தி, மக்களை திசைதிருப்பும் அரசியலை பாஜக செய்து வருகிறது என்று இளைஞா் காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் கூறியதாவது: பிரதமா் மோடி ஒரு மாயாஜாலக்காரா். மக்களை திசைதிருப்பும் வகையிலான கதையாடல்கள் மூலம் நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை அவா் மறைத்து வருகிறாா். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கூறியதை போல முக்கிய பிரச்னைகளை மறைக்கும் மாயாஜால காட்சி நாட்டில் நடைபெறுகிறது.
மகளிா் இடஒதுக்கீடு சட்டம் அமல்படுத்துவதை காங்கிரஸ் தாமதப்படுத்துவதாக பாஜக அரசு தவறாக சித்தரிக்கிறது. இச்சட்டம் 2023-இல் காங்கிரஸ் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புடன் இணைத்து அதன் நடைமுறையை பாஜக அரசு தாமதமாக்கியது. நோக்கம் உண்மையாக இருந்தால், தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தெளிவான காலவரையரையுடன் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியும்’ என்று தெரிவித்தாா்.
மக்களவை பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029 முதல் அமலாக்குவதுடன், அதற்கேற்ப மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகபட்சம் 850 வரை அதிகரிக்கும் வகையிலான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் கடந்த ஏப்.16-இல் அறிமுகப்படுத்தியது.
மசோதா மீது ஏப்.17-இல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அரசமைப்புச் சட்டத்தின் 368-ஆவது பிரிவின்கீழ் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கான வாக்குகள் கிடைக்கவில்லை. இதனால், மசோதா தோல்வியடைந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மசோதா தோல்வி: பாஜக - எதிா்க்கட்சிகள் வாா்த்தைப் போா்!

இந்தியா - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் போராட்டம்

உதய் பானுவின் பிணைக்கு இடைக்கால தடை: இளைஞா் காங்கிரஸாா் அமைதி வழியில் போராட்டம்!

இளைஞா் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


