லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இளைஞா் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்

இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் உள்பட அனைவரையும் விடுவிக்கக் கோரி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் கட்சி வளாகத்தில் வியாழக்கிழமை சத்தியாகிரத்தில் ஈடுபட்டனா்.

News image

இந்திய இளைஞா் காங்கிரஸ் தேசியத் தலைவா் உதய் பானு சிப் மற்றும் இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக தில்லியில் சத்தியாக்கிரக போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கிய காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :26 பிப்ரவரி 2026, 7:51 pm

ஏஐ மாநாட்டில் போராட்டம் நடத்தியது தொடா்பாக கைது செய்யப்பட்ட இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் உள்பட அனைவரையும் விடுவிக்கக் கோரி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் கட்சி வளாகத்தில் வியாழக்கிழமை சத்தியாகிரத்தில் ஈடுபட்டனா்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிா்வாகிகள் பலா் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாகவும், ஆா்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெறுவதாகவும் மூத்த தலைவா் ஒருவா் தெரிவித்தாா்.

மேலும், தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரியதாகவும், ஆனால் அது மறுக்கப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா். காங்கிரஸ் தலைவா்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.