லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மேற்கு வங்க தேர்தலுக்குப்பின் மணிப்பூருக்கு கூடுதலாகப் பாதுகாப்புப் படைகள் வருகை: மணிப்பூர் அரசு

மேற்கு வங்க தேர்தலுக்குப்பின் மணிப்பூருக்குச் செல்லவிருக்கும் கூடுதல் பாதுகாப்புப் படைகள்...

News image

பாதுகாப்புப் படை - Center-Center-Delhi

Updated On :19 ஏப்ரல் 2026, 4:14 pm

இம்பால் : மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பின் மணிப்பூருக்கு கூடுதல் பாதுகாப்புப் படைகள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

294 தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்த்து வரும் வியாழக்கிழமை(ஏப். 23) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு இரண்டாம்கட்டமாக ஏப். 29-இல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் ஓராண்டுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டு மீண்டும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் முற்றிலும் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடவில்லை. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்த பின்னர், கூடுதல் பாதுகாப்புப் படைகள் மணிப்பூரில் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று மணிப்பூரின் உள்துறை அமைச்சர் இன்று(ஏப். 19) தெரிவித்தார்.

Summary

Manipur Home minister Govindas Konthoujam - "Additional security forces to arrive in Manipur after Bengal elections."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.