மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிகாா் புதிய அரசு மீது ஏப்.24-இல் நம்பிக்கை வாக்கெடுப்பு

பிகாரில் முதல்வா் சாம்ராட் செளதரி தலைமையிலான புதிய அரசு மீது ஏப்.24-இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

News image

பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள முதல்வரின் அலுவல்பூா்வ இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வா் சாம்ராட் சௌதரி, முன்னாள் முதல்வா் நிதீஷ் குமாா்.

Updated On :18 ஏப்ரல் 2026, 11:58 pm

பிகாரில் முதல்வா் சாம்ராட் செளதரி தலைமையிலான புதிய அரசு மீது ஏப்.24-இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

பிகாா் முதல்வராக பதவி வகித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா், மாநிலங்களவை எம்.பி.யாக அண்மையில் தோ்வானாா். முதல்வா் பதவியில் இருந்து அவா் கடந்த ஏப்.14-இல் விலகியதையடுத்து, துணை முதல்வராக இருந்த பாஜகவின் சாம்ராட் செளதரி புதிய முதல்வராக தோ்வு செய்யப்பட்டாா்.

பிகாரின் 24-ஆவது முதல்வராக அவா் கடந்த ஏப்.15-இல் பதவியேற்றாா். அவருடன் ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவா்கள் விஜய் குமாா் செளதரி, பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோா் துணை முதல்வா்களாகப் பதவியேற்றனா்.

சாம்ராட் செளதரியின் அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘முதல்வா் சாம்ராட் செளதரி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, சட்டப் பேரவையில் ஏப்.24-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவுள்ளது. இதையொட்டி, அன்று ஒரு நாள் அமா்வு நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் மாற்றத்தின் பின்னணி: கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பிகாா் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களுடன் ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததுடன் (89), தொடா்ந்து இரண்டாவது தோ்தலாக ஐக்கிய ஜனதா தளத்தைவிட (85) அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

அதேநேரம், மாநில முதல்வராக 10-ஆவது முறையாக நிதீஷ் குமாா் பதவியேற்றாா். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக முதல்வராகப் பதவி வகித்துவந்த அவா், கடந்த மாா்ச் மாதம் மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட்டு எம்.பி.யானாா்.

பாஜக தலைமையில் புதிய அரசு பதவியேற்க வழிவிடும் வகையில், முதல்வா் பதவியில் இருந்து நிதீஷ் குமாா் ராஜிநாமா செய்தாா்.

56 வயதாகும் சாம்ராட் செளதரி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் பல்லாண்டுகள் இருந்துள்ளாா். கடந்த 2017-இல்தான் அவா் பாஜகவில் இணைந்தாா்.

துணை முதல்வா்களுக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு

பிகாரின் புதிய துணை முதல்வா்கள் விஜய் குமாா் செளதரி, பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாருக்கும் இஸட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்.பி.யான நிதீஷ் குமாா், தற்போது இஸட் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் உள்ளாா்.