சிக்கிம் மாநிலத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (ஏப்.17) பேரணி நடத்தப்பட்டது.
சிக்கிம் தலைநகர் கேங்டாக் மாவட்டத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து நடத்தப்பட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.
தியோராலியில் உள்ள டாடா ஸ்டாண்ட் என்னும் இடத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, பாணி ஹவுஸ், மெட்ரோ பாயிண்ட் மற்றும் தாரா மருத்துவமனை வழியாகச் சென்று பால்ஜோர் திடலில் நிறைவடைந்தது.
சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களும், அரசு பணியாளர்களும் மற்றும் அரசியல் ஆர்வலர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆதரவாக, பங்கேற்பாளர்கள் தேசியக் கொடியை ஏந்திச் சென்றும், முழக்கங்களை எழுப்பியும் அந்தப் பேரணியை நிறைவு செய்தனர்.
ஏற்பாட்டளர்களின் ஒருவரான, அப்பர் புர்துக் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் காலா ராய், இந்த சட்டம் தேசத்திற்கே பெருமை என்றும், நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க சிக்கிம் பெண்கள் ஒன்று திரண்டுள்ளனர் என்றும் கூறினார்.
மேலும், மாநிலத்தின் ஆறு மாவட்டங்களிலிருந்தும் சுமார் 25,000 பெண்கள் பேரணியில் கலந்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.
Summary
A rally was held today in the state of Sikkim to express support for women's reservation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மகளிர் டி20 உலகக் கோப்பை: நடுவர்கள் குழுவில் தமிழ்ப் பெண் உள்பட 4 இந்தியர்களுக்கு வாய்ப்பு!
கோவை சிறுமி படுகொலை: 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு!
சிக்கிமில் ரூ. 4,000 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




