மக்களவையில் இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், எனக்கும் மோடிக்கும் மனைவிப் பிரச்னை இல்லை என்று கூறியதால் சிரிப்பலை ஏற்பட்டது.
மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை திருத்தவும், தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கவும் வகை செய்யும் மூன்று மசோதாக்கள் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.
விவாதத்தின் நிறைவாக இன்று மாலை மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெறவிருக்கும் நிலையில், விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் தோற்றத்தை வடிவமைப்பதன் மையப்புள்ளியாக விளங்குபவர்கள் பெண்கள், அவர்கள்தான் சமூகத்தின் இயக்க சக்தி என்றார்.
மேலும், தாய், சகோதரி மற்றும் மனைவி என, குடும்பத்தில் உள்ள பெண்களால்தான் பலரும் தாக்கத்தைப் பெற்றுள்ளோம், அவர்கள்தான் சமூகத்தைப் பற்றி கற்பிக்கிறார்.
பெண்கள்தான் சக்தியின் மையப்பகுதி, தேசிய தோற்றத்தின் இயங்கு சக்தியாக, நமது தேசிய கண்ணோட்டத்தின் மையமாக விளங்குவது பெண்கள்தான். நம் அனைவருமே, இந்த அறையில் உள்ள ஒவ்வொருவரும், அவரவர் வாழ்வில் இணைந்துள்ள பெண்களிடமிருந்து நிறைய தாக்கத்தைப் பெற்றிருக்கிறோம், அவர்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டோம், வாழ்க்கையில் நிறை கற்றுக்கொண்டிருக்கிறோம் என்றார்.
இவ்வாறு மகளிர் பற்றி பேசுகையில், தாய், சகோதரி, மனைவி என்று பெண்களைப் பற்றி சொன்னவர், எனக்கும் பிரதமர் மோடிக்கும் மனைவி பிரச்னை இல்லை என்று கூறி சிரித்தார். இதனைக் கேட்ட மக்களவை உறுப்பினர்களும், கடும் விவாதத்துக்கு இடையே அவர்களை மறந்து வாய்விட்டு சிரித்ததால், அவை முழுவதும் சிரிப்பலை எழுந்தது.
விவாதத்தின் நிறைவாக இன்று மாலை மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது.
மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு, யூனியன் பிரதேச சட்டத் திருத்தம் என இந்த மூன்று மசோதாக்களையும் கொண்டுவந்து நிறைவேற்றும் நோக்கில், மத்திய அரசு நாடாளுமன்ற மூன்று நாள் சிறப்பு அமர்வு வியாழக்கிமை தொடங்கியது.
இந்த மூன்று மசோதாக்களும் அறிமுக நிலையிலேயே கடும் எதிர்ப்பை சந்தித்தன. இதையடுத்து வாக்கெடுப்புக்குப் பிறகே அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து விவாதம் நடைபெற்று நிறைவு பெற்றதும் வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Modi and I don't have 'wife issues' said Rahul creates a stir
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! ராகுல் வீட்டின் அருகே பாஜக மகளிரணி போராட்டம்!
மோடி ஒரு மாயாஜாலக்காரர்! ஆபரேஷன் சிந்தூர் போன்ற வித்தைகளை செய்தவர்! ராகுல் பேச்சு

ராகுலுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

டிரம்ப்பின் கட்டுப்பாட்டில் பிரதமர் மோடி! - அசாம் பிரசாரத்தில் ராகுல் கடும் தாக்கு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


