மகாராஷ்டிரத்தில் உயர்கல்வியில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுவதையடுத்து, கல்லூரி முதல்வர்கள், நிர்வாக இயக்குநர்கள், பேராசிரியர்கள் மற்றும் கற்பித்தல் பணியாளர்களுக்கு கட்டாய பயிற்சி தொடங்கவுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கை(என்இபி 2020) படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டில் ஒன்றாம் வகுப்புக்கு என்இபி அறிமுகமானது. வரும் கல்வியாண்டில்(ஜூன் 15 முதல்) 2 முதல் 6-ஆம் வகுப்பு வரை (ஐந்தாம் வகுப்பு நீங்கலாக) என்இபி அறிமுகமாகிறது. 2028-இல் பிற வகுப்புகளுக்கும் என்இபி அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வரும் மே மாதம், பள்ளி ஆசிரியர்கள் புதிய தேசிய கல்விக் கொள்கையின்கீழ், கட்டாயம் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்புகளுக்கான பயிற்சியை நிறைவு செய்தாக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மகாராஷ்டிரத்தில் கல்லூரிகளில் என்இபி 2020-இன் கீழ் புதிதாக நான்காண்டு இளநிலை பட்டப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
உயர்கல்வியில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுவதையடுத்து, மகாராஷ்டிர மாநில கற்பித்தல் பணியாளர்கள் மேம்பாட்டு அகாதெமி (எம்.எஸ்.எஃப்.டி.ஏ.) கற்றல் மேலாண்மை முறையில் (எல்எம்எஸ்) கல்லூரி முதல்வர்கள், நிர்வாக இயக்குநர்கள், பேராசிரியர்கள் மற்றும் கற்பித்தல் பணியாளர்களுக்கு ஆன்லைன் வழி பயிற்சிக்கான பாடங்களை ஏற்கெனவே தயாரித்துவிட்டதாக அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி வகுப்புகள் மே மத்தியில் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளும் இந்தப் பயிற்சியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. என்இபி-இன் கீழ், கல்லூரிகளெங்கிலும் புதிய கல்வி முறை நிர்வாகச் சிக்கலின்றி அறிமுகமாவதை உறுதிசெய்ய இந்தப் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
என்இபி 2020-இன் கீழ், உயர்கல்வியை ஆராய்ச்சி ரீதியாக மாற்றும் முன்னெடுப்பில் முக்கிய நடவடிக்கையாக மேற்கண்ட முடிவு அமையும் என்று அம்மாநில உயர்நிலை மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டில் தெரிவித்தார்.
Summary
The Maharashtra government has made it mandatory for principals, directors and faculty of colleges to undergo training from May, as the state prepares to roll out new four-year undergraduate programmes under the National Education Policy (NEP) 2020.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கட்டாய மத மாற்றத்தை பயங்கரவாத செயலாக அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2 - ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள்

நெல் ஊக்கத்தொகை குறித்த கடிதம் கட்டாய உத்தரவு அல்ல: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்

யோகா பயிற்சி நிறைவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


