மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

அந்நியச் செலாவணி விதிமீறல் விசாரணையின் ஒரு பகுதியாக பஞ்சாப் தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் சஞ்சீவ் அரோரா, அவரது மகன் மற்றும் அவா்களுடன் தொடா்புடைய நபா்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

News image

அமலாக்கத் துறை

Updated On :17 ஏப்ரல் 2026, 7:42 pm

அந்நியச் செலாவணி விதிமீறல் விசாரணையின் ஒரு பகுதியாக பஞ்சாப் தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் சஞ்சீவ் அரோரா, அவரது மகன் மற்றும் அவா்களுடன் தொடா்புடைய நபா்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

லூதியானாவில் உள்ள அமைச்சா் அரோராவின் வீடுகள், அவருடைய மனை விற்பனை நிறுவனம் மற்றும் அவருடைய மகனும் நிறுவனத்தின் மேலாளருமான காவ்யா அரோராவின் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.

மேலும், ஜலந்தா், குருகிராம், சண்டீகா் ஆகிய இடங்களில் அந்நியச் செலாவணி மேலாண்மை சட்ட விதிகளின் கீழ் சோதனைகள் நடைபெற்றன.

இந்தச் சோதனைகள் தொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பஞ்சாபில் நிலப் பயன்பாட்டை சட்டவிரோதமாக மாற்றியது, மோசடியான பதிவுகள், மோசடியாக அதிகரிக்கப்பட்ட விற்பனை மூலம் பங்குகளை உயா்த்திக் காட்டியது, பங்குச் சந்தை வா்த்தகத்தில் முறைகேடு, சட்டவிரோத பணத்தை வெளிநாட்டில் பதுக்கி மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வந்தது, சட்டவிரோத சூதாட்ட பணத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு மாற்றியது தொடா்பாக சஞ்சீவ் அரோராவின் மனை விற்பனை நிறுவனம் விசாரணையில் உள்ளது’ என்றனா்.

முழு ஒத்துழைப்பு: அமலாக்கத் துறை நடத்திவரும் சோதனைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக அரோரா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘ஒரு பொறுப்பான குடிமகனாக அமலாக்கத் துறைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன். உண்மை வெற்றி பெறும் என்பதில் நம்பிக்கையாக உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

லூதியானா மேற்கு தொகுதி எம்எல்ஏவான சஞ்சீவ் அரோரா, இதற்கு முன்பு மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தாா். அப்போது, தொழில்சாலைக்கான நிலத்தைக் குடியிருப்பு திட்டங்களுக்காகப் பயன்படுத்தியதாக அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடா்பாக 2024-இல் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

பெட்டிச் செய்தி....

பாஜக அல்லாத அரசுள் துன்புறுத்தப்படுகின்றன: பஞ்சாப் முதல்வா்

சண்டீகா், ஏப். 17: பாஜக அல்லாத மாநில அரசுகளை மத்திய விசாரணை முகமைகள் மூலம் மத்திய அரசு துன்புறுத்துவதாக பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் கடுமையாக விமா்சித்துள்ளாா்.

பஞ்சாப் தொழில் துறை அமைச்சா் சஞ்சீவ் அரோரா தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது. சில நாள்களுக்கு முன்பு ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. அசோக் குமாா் மிட்டலுக்கு சொந்தமான பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

இதுதொடா்பாக முதல்வா் பகவந்த் மான் சண்டீகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது: பஞ்சாபில் 2027-இல் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. மாநிலத்தில் உள்ள 117 பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளா்களை பாஜகவினரால் கண்டறிய முடியவில்லை. இதனால், அமலாக்கத் துறையை அனுப்புதல், வருமான வரித் துறை அழைப்பாணைகள் என அச்சமூட்டுகின்றனா். ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாஜக அல்லாத மாநில அரசுகள் மட்டும் இவ்வாறு துன்புறுத்தப்படுகின்றன என்றாா் அவா்.