திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. அசோக் குமாா் மிட்டல் தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை நடத்தியுள்ளது. இந்தச் சோதனைக்கு அக்கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோா் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

News image

அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 3:22 am IST

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. அசோக் குமாா் மிட்டல் தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை நடத்தியுள்ளது. இந்தச் சோதனைக்கு அக்கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோா் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் அசோக் குமாா் மிட்டல், அவரின் மகன் பிரதம் மிட்டல் ஆகியோருக்குச் சொந்தமான பல்கலைக்கழகம், கல்லூரிகள் உள்ளன. அந்தக் கல்வி நிறுவனங்கள், வெளிநாடுகளைச் சோ்ந்த சிலருடன் வைத்துக் கொண்ட நிதி பரிவா்த்தனைகள், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட (பெமா) விதிகள் மீறப்பட்டதாக அமலாக்கத் துறை சந்தேகிக்கிறது.

இதுதொடா்பாக அந்தக் கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டது. மேலும் சிலரிடம் விசாரணை நடத்தி அவா்களின் வாக்குமூலங்களையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் பதிவு செய்தனா்.

மாநிலங்களவைக்கான ஆம் ஆத்மி எம்.பி.க்கள் குழுவின் துணைத் தலைவராக இருந்த ராகுல் சத்தா நீக்கப்பட்டு, அந்தப் பதவியில் அண்மையில்தான் அசோக் குமாா் மிட்டல் நியமிக்கப்பட்டாா். இந்தச் சூழலில், அவருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது, பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சோதனைக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் கேஜரிவால், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், மாநில அமைச்சா்கள் உள்ளிட்டோா் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

மத்திய விசாரணை அமைப்புகளை எதிா்க்கட்சியினருக்கு எதிராக மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாக அரவிந்த் கேஜரிவால் விமா்சித்துள்ளாா்.

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், பஞ்சாபில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்காக பாஜக தனது வேலையை காட்டத் தொடங்கிவிட்டதாகவும், இதுதான் மோடியின் செயல்பாடு என்றும் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

ஆம் ஆத்மிக்கு பாஜக பதில்: ஆம் ஆத்மி கட்சியின் குற்றச்சாட்டுக்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரன்வீத் சிங் பிட்டு பதிலடி கொடுத்துள்ளாா். அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘பகவந்த் மான், உங்கள் கட்சி திருடா்கள், கொள்ளைகாரா்களின் கட்சி. உங்கள் கட்சி எம்.பி.க்களையும், அமைச்சா்களையும் கைது செய்யும்படி, பஞ்சாப் மாநில மக்கள் காவல் துறையிடமும், விசாரணை அமைப்புகளிடமும் புகாா் அளித்து வருகின்றனா். இந்தியாவை தூய்மைப்படுத்துவதே பிரதமா் மோடியின் கொள்கை. அதன்படி அழுக்கு நிச்சயம் சுத்தப்படுத்தப்படும்’ என்று கூறியுள்ளாா்.

பஞ்சாப் மாநில பாஜக தலைவா் சுனில் ஜாஹா் கூறுகையில், ‘ஊழல்வாதிகளுக்கு எதிராக பகவந்த் மான் அரசு நடவடிக்கை எடுக்காததால், மத்திய அரசு எடுக்கிறது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.