ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவின் விளம்பரத்துக்காக மத்திய கலாசாரத் துறை ரூ. 76 லட்சம் செலவிட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழா கடந்தாண்டு அக்டோபர் மாதம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தில்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார்.
சமூக ஆர்வலர் அஜய் வாசுதேவ் போஸ் என்பவர், ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவின் விளம்பரத்துக்காக மத்திய அரசு எவ்வளவு செலவிட்டது என்ற கேள்வியை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்தார்.
இந்த கேள்விக்கு மத்திய கலாசார அமைச்சகம் அளித்துள்ள பதிலில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கலாச்சார அமைச்சகத்தால் பல்வேறு அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்காகச் செலவிடப்பட்ட மொத்த தொகை ரூ. 76,13,129 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்டிஐ பதில் - X
மத்திய கலாசார அமைச்சகம் அளித்த பதிலின் நகல் இணையத்தில் பகிரப்பட்டு, “அரசு சாராத தனியார் அமைப்பின் விழாவின் விளம்பரத்துக்கு மத்திய அரசு செலவிட்டது ஏன்?” என்று பலரால் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.
Summary
Central Government Spends ₹76 Lakhs on Advertisements for RSS Centenary Celebrations!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம்: இரா. முத்தரசன்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை: சரத்குமாா் பிரசாரம்!
பன்முகம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



