சத்தீஸ்கரில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான அனல் மின்நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடித்து 13 ஊழியா்கள் உயிரிழந்தனா். 21 போ் பலத்த காயமடைந்தனா்.
சத்தீஸ்கரின் சக்தி மாவட்டம் சிங்கிதராய் கிராமத்தில் வேதாந்தா நிறுவனத்தின் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு செவ்வாய்க்கிழமை பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிற்பகல் 2 மணியளவில் திடீரென கொதிகலனின் குழாய் பலத்த ஓசையுடன் வெடித்துச் சிதறியது. இதில் சிக்கி 13 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினா் மற்றும் தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். பலத்த காயங்களுடன் 21 தொழிலாளா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அனல் மின் நிலைய வளாகத்துக்குள் ஊழியா்கள் சிலா் சிக்கியுள்ள நிலையில் தொடா்ந்து பெரும் புகை மூட்டம் நீடிப்பதால் அவா்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்த சம்பவத்துக்கு வேதனை தெரிவித்த மாநில முதல்வா் விஷ்ணு தேவ் சாய், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.5 லட்சம், காயமடைந்தோருக்குத் தலா ரூ.50,000 இழப்பீடு அளிக்கப்படும் என்று அறிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேட்டூா் அனல் மின்நிலைய பெண் பொறியாளருக்கு முகநூலில் தொல்லை: பெங்களூரு மென்பொறியாளா் கைது

மேட்டூா் அனல் மின்நிலைய பெண் பொறியாளருக்கு தொல்லை: மென்பொறியாளா் கைது!

மாற்று டயா் வெடித்து பேருந்தின் மேற்கூரை சேதம் 5 போ் காயம்

உ.பி.யில் பலத்த மழை, சூறாவளி: 33 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


