டிசிஎஸ்-ன் நாசிக் நகரில் இயங்கி வந்த தனியார் பிபீஓ அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளர்களாக பணியாற்றியபடி காவலர்கள் பல்வேறு விவகாரங்களில் புலனாய்வு செய்து காவல்துறைக்கு அளித்த முக்கிய தகவலின் அடிப்படையில் மிகப்பெரிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது குறித்து ஒன்பது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மூத்த மனிதவள அதிகாரி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது மிக மோசமான குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
பணி அழுத்தம் காரணமாக, 20 வயது மதிக்கத்தக்க இந்து பெண் ஒருவர், ரமலான் நோன்பு கடைபிடிப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் காவல்துறையினருக்கு ஒரு புகார் வந்தது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய பல்வேறு கோண விசாரணையில், பணியிடத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள், கட்டாயப்படுத்துதால், மதரீதியிலான அழுத்தம் போன்ற பல குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 150 பேர் வேலை செய்யும் ஒரு பணியிடத்தில், தங்கள் மகள் பணியாற்றத் தொடங்கியதிலிருந்து, அவரது பழக்க வழக்கங்களில் பல்வேறு மாற்றங்கள் தெரிந்ததால், அவரை பணியிலிருந்து நிறுத்திவிட்டதாக காவல்துறைக்கு ஒரு பெற்றோர் தெரிவித்திருக்கிறார்கள்.
உடனடியாக, காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் மற்றும் தலைமைக் காவலர் ஒருவரை அந்த அலுவலகத்துக்குள் துப்புரவுப் பணியாளராக அனுப்பினர். அவர்கள் அங்கு பணியாற்றியபடி, பணியாளர்களிடம் பேசிய அலுவலகத்தில் நடப்பதை தங்களது உயரதிகாரிகளுக்கு நாள்தோறும் தெரிவித்திருக்கிறார்கள்.
காவல்துறை நடத்திய புலனாய்வில், தனிஷ் ஷேக், திருமண ஆசை காட்டி பெண்களை பலாத்காரம் செய்வது, மதம் மாற்றுவது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். மற்றொரு டௌஸிப் அடைர் என்பவரது செல்போனில் இந்து பெண், முஸ்லிம் ஆடை அணிந்திருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
அங்குள்ள 18 - 25 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்டு மதரீதியிலான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலில் யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை. இவர்கள் கைது செய்யப்பட்ட பிறகே பலரும் புகார் கொடுத்துள்ளனர்.
பெண்களை அனுமதியில்லாமல் தொடுவது, பெண்களை நிறத்தின் அடிப்படையில் விமர்சிப்பது, மதம் மாற்ற வற்புறுத்துவது, எதிர்த்தால் பணி அழுத்தம் கொடுத்து அவர்களை துன்புறுத்துவது போன்ற பல்வேறு குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஒரு பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் குற்றம் குறித்து புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காத மேலாளர்களும் அடங்குவர். குற்றவாளிகளுக்கு வெளியிலிருந்து பணம் ஏதேனும் வருகிறதா என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நபர்களை டிசிஎஸ் உடனடியாக பணி நீக்கம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது. விசாரணைக்கு நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் 9 ஆண்டுகளுக்கு பின்பு கைது
டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டு: பெண் ஊழியா் கைது

நாசிக் டிசிஎஸ் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட நிதா கான் கைது!

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



