ஹிமாசலில் சந்தேகத்திற்குரிய பாகிஸ்தான் பலூன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தின் அருகே பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் என்ற வாசகம் எழுதப்பட்ட விமான வடிவிலான சந்தேகத்திற்குரிய பலூன் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து உள்ளூர்வாசி ராஜ்குமார் கூறுகையில், பலோஹ் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், சனிக்கிழமை காலை இந்த சந்தேகத்திற்கிடமான பலூனைப் பார்த்ததாக தெரிவித்தார்.
பின்னர் அவர்கள் உடனடியாக தலாய் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அந்த பலூனைப் பறிமுதல் செய்து விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.
மற்றொரு உள்ளூர்வாசியான ராஜேஷ் கௌதம், அந்த பொருள் விமான வடிவிலான பலூன் என்றும் அதில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் என்ற வார்த்தைகள் தெளிவாகத் தெரிந்ததாகவும் விவரித்தார். இதுகுறித்து போலீஸாரும் நிர்வாகமும் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஹிமாச்சப் பிரதேசத்தில் இதுபோன்ற பலூன் கண்டெடுக்கப்படுவது இது முதல் முறையல்ல. உனா மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்களில் அவ்வப்போது இதுபோன்ற பலூன்கள் கண்டறியப்படுவது குறிப்பிடத்தக்கது.
Summary
A suspicious "airplane-shaped balloon" bearing the inscription "Pakistan International Airlines" was spotted in the fields near a village here on Saturday, according to locals.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகா்கோவில் ஆட்சியரகத்தில் ராட்சத விழிப்புணா்வு பலூன்

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூன், மனிதச் சங்கிலி

100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

பிஎஸ்எல் தொடரில் பந்தைச் சேதப்படுத்திய ஃபஹர் ஸமான்..! 5 ரன்கள் பெனால்டி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



