திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறுவாக்குப்பதிவு! எங்கு, ஏன்?

அஸ்ஸாமில் ஒரேயொரு வாக்குச்சாவடியில் மட்டும் ஏப்.11 அன்று மறுவாக்குப்பதிவு...

News image

வாக்குப்பதிவு... - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 7:32 pm IST

அஸ்ஸாமின் கரீம்கஞ்ச் (வடக்கு) சட்டப்பேரவைத் தொகுதியின் ஒரேயொரு வாக்குச்சாவடியில் மட்டும் ஏப்.11 அன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை (ஏப். 9) அன்று நடைபெற்றது. 126 பேரவைத் தொகுதிகளுக்கு, 2.5 கோடி வாக்காளர்களைக் கொண்ட அஸ்ஸாமில் 85.91 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, ஸ்ரீபூமி மாவட்டத்தில் உள்ள கரீம்கஞ்ச் (வடக்கு) சட்டப்பேரவைத் தொகுதியின், ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது ஆளுங்கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல்கள் வெடித்தன.

இந்த நிலையில், அஸ்ஸாமின் 239 ஆவது வாக்குச்சாவடியான பேபிலேண்ட் ஹை இங்கிலீஷ் பள்ளியில் வரும் ஏப்.11 அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை (ஏப். 10) அன்று அறிவித்துள்ளது.

முன்னதாக, 14 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள கரீம்கஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக, காங்கிரஸ் மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயூடிஎஃப்) ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Summary

re-polling will be held on April 11 at a single polling station in the Karimganj (North) Assembly constituency of Assam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.